பொது செய்தி

இந்தியா

ஊரடங்கு தளர்த்தப்பட்டும் தனியார் பஸ் இயக்கம் இல்லை

Added : ஜூன் 16, 2021
Share
Advertisement
பெங்களூரு-'கர்நாடகாவில், ஊரடங்கு தளர்த்தப்பட்டும், தனியார் பஸ்கள் இயங்கவில்லை. தற்போதைக்கு பஸ்களை இயக்க வேண்டாம்' என, தனியார் பஸ் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.இது தொடர்பாக, கர்நாடக தனியார் பஸ் உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் ராஜவர்மா பள்ளால், நேற்று கூறியதாவது:தனியார் பஸ் உரிமையாளர்களின் கோரிக்கைகளை மாநில அரசு பொருட்படுத்தவில்லை. எனவே ஊரடங்கு

பெங்களூரு-'கர்நாடகாவில், ஊரடங்கு தளர்த்தப்பட்டும், தனியார் பஸ்கள் இயங்கவில்லை. தற்போதைக்கு பஸ்களை இயக்க வேண்டாம்' என, தனியார் பஸ் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.இது தொடர்பாக, கர்நாடக தனியார் பஸ் உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் ராஜவர்மா பள்ளால், நேற்று கூறியதாவது:தனியார் பஸ் உரிமையாளர்களின் கோரிக்கைகளை மாநில அரசு பொருட்படுத்தவில்லை. எனவே ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னும், நாங்கள் பஸ்களை இயக்கவில்லை.டீசல் விலை அதிகரித்தும், பயண கட்டணத்தை உயர்த்த, அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே மேலும் நஷ்டத்தை சந்திக்க தயாராக இல்லை.மாநில அரசு உடனடியாக, பஸ் உரிமையாளர்களை, பேச்சு நடத்த அழைக்க வேண்டும். பிரச்னையை சரி செய்ய வேண்டும்.மேலும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும். அதுவரை பஸ்களை இயக்க வேண்டாம் என, முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர்கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X