பொது செய்தி

இந்தியா

இஸ்ரேல் நாட்டு விவசாய முறையில் உற்பத்தி மையங்கள் துவக்கம்

Added : ஜூன் 16, 2021
Share
Advertisement
பெங்களூரு-கோலார், பாகல்கோட், தார்வாட் ஆகிய மூன்று மாவட்டங்களில் இஸ்ரேல் நாட்டு விவசாய முறையில், தோட்டக்கலை துறை உற்பத்தி மையங்கள் நேற்று திறக்கப்பட்டுள்ளன.தோட்டக்கலை துறையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இஸ்ரேல் நாட்டில் விவசாயம் செய்யப்படுகிறது.இதன்படி நாட்டின், 29 நகரில் தோட்டக்கலை உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதில், கர்நாடகாவில், கோலாரில்

பெங்களூரு-கோலார், பாகல்கோட், தார்வாட் ஆகிய மூன்று மாவட்டங்களில் இஸ்ரேல் நாட்டு விவசாய முறையில், தோட்டக்கலை துறை உற்பத்தி மையங்கள் நேற்று திறக்கப்பட்டுள்ளன.தோட்டக்கலை துறையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இஸ்ரேல் நாட்டில் விவசாயம் செய்யப்படுகிறது.இதன்படி நாட்டின், 29 நகரில் தோட்டக்கலை உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதில், கர்நாடகாவில், கோலாரில் மாம்பழம் உற்பத்தி மையம்; பாகல்கோட்டையில் மாதுளை உற்பத்தி மையம்; தார்வாடில் காய்கறிகள் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டது.காணொலி இதை மத்திய விவசாய துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், டில்லியில் இருந்தவாறே காணொலி மூலம் நேற்று திறந்து வைத்தார்.பயிற்சி செயற்கைகோள் அளிக்கும் தகவல்படி நீர் மேலாண்மை, சொட்டு நீர் பாசனம், இயற்கை உரம், ஆகியவற்றை கொண்டு விவசாயம் செய்ய கர்நாடக விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் எடியூரப்பா பேசியதாவது:கர்நாடகாவில் தோட்டக்கலை துறை விளைச்சல் அதிகரிப்பது, நவீன தொழில்நுட்பம் புகுத்துதல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.விவசாயிகளின் லாபத்தை இரட்டிப்பு ஆக்குவதே அரசின் நோக்கமாகும். அதற்காகவே இந்தியா - இஸ்ரேல் இணைந்து தோட்டக்கலை துறையில் புதிய திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.மத்திய விவசாய துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் பேசுகையில், ''இஸ்ரேல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெற வேண்டும். லாபத்தை அதிகரித்துகொள்ள வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X