பொது செய்தி

இந்தியா

வரப்பிரசாதம்!'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்துக்கு ஊரடங்கு...பல இடங்களில் வேகமாக நடக்கும் பணி

Added : ஜூன் 17, 2021
Share
Advertisement
பெங்களூரு; கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில், அரசு அமல்படுத்தியுள்ள ஊரடங்கு, தொழிலாளர்கள் மட்டுமின்றி, தொழிலதிபர்களையும் தொந்தரவுக்கு ஆளாக்கியது. எனினும், பெங்களூரில் நடந்து வரும், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டப்பணிகளுக்கு, அது வரப்பிரசாதமாக அமைந்துள்ளது; பணிகள் சுமூகமாக நடக்கின்றன.கர்நாடகாவில், கொரோனா முதல் அலை படிப்படியாக குறைவதற்குள், இரண்டாவது அலை துவங்கி,

பெங்களூரு; கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில், அரசு அமல்படுத்தியுள்ள ஊரடங்கு, தொழிலாளர்கள் மட்டுமின்றி, தொழிலதிபர்களையும் தொந்தரவுக்கு ஆளாக்கியது. எனினும், பெங்களூரில் நடந்து வரும், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டப்பணிகளுக்கு, அது வரப்பிரசாதமாக அமைந்துள்ளது; பணிகள் சுமூகமாக நடக்கின்றன

.கர்நாடகாவில், கொரோனா முதல் அலை படிப்படியாக குறைவதற்குள், இரண்டாவது அலை துவங்கி, நாளடைவில் தீவிரமடைந்தது. இதனால் மாநில அரசு, வார இறுதி ஊரடங்கு, இரவு ஊரடங்கு அமல்படுத்தியது. அதிகமான கெடுபிடிகளால் மக்கள் அவதிப்பட்டனர். தொழிலாளர்கள், வியாபாரிகள், விவசாயிகள், தொழிலதிபர்கள், ஆட்டோ, டாக்சி ஓட்டுனர், கட்டட பணியாளர்கள் என, அனைத்து வர்க்கத்தினரும் பாதிப்படைந்தனர்.

ஏராளமானோர் வேலையை பறிகொடுத்து, வாழ்க்கை நடத்த முடியாமல் திணறினர். விவசாயிகள் தங்களின் உற்பத்திகளை விற்க முடியாமல் நஷ்டமடைந்தனர். பொது மக்களை வாட்டி வதைத்த, கொரோனா ஊரடங்கு, 'ஸ்மார்ட் சிட்டி' பணிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. ஊரடங்கை மாநில அரசும், நகர திட்ட கார்ப்பரேஷன்களும், நன்றாகவே பயன்படுத்திக்கொண்டன.

இத்திட்டத்தின் கீழ், 21 சாலைகளை தரம் உயர்த்தும் பணிகள் முடிந்து, ஜூன், ஜூலையில் பொது மக்களின் பயன்பாட்டுக்கு, தயார் நிலையில் உள்ளன.பி.எஸ்.சி.எல்., எனும் பெங்களூரு ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் நிர்வாக அதிகாரி ராஜேந்திர சோழன் கூறியதாவது:கொரோனா முதலாவது ஊரடங்கை விட, இரண்டாவது ஊரடங்கு நன்றாகவே பயன்படுத்தப்பட்டது. இவ்வேளையில் 15.15 கி.மீ.,க்கு பணி முடிவடைந்துள்ளது.

ஹேய்ஸ் சாலை, புட் ஸ்ட்ரீட், டேட் லைன், ராஜாராம் மோகன்ராய் சாலை, கான்வென்ட் சாலை, மெக்ராத் சாலை, கியாசல் ஸ்ட்ரீட், லேவல்லி சாலை, பிரிகேட் சாலை, டிக்கென்சன் சாலை, குயின்ஸ் சாலை, அரண்மனை சாலை, இன்பென்ட்ரி சாலைகளில் பணிகள் முடிவடைந்துள்ளன. இம்மாதம் இறுதியில், பொது மக்களின் பயன்பாட்டுக்கு விடப்படும். கம்மர்ஷியல் ஸ்ட்ரீட், கன்டோன்மென்ட் சாலை, மில்லர்ஸ் சாலை விஸ்தரிப்பு, ஜூம்மா மசூதி சாலை, கஸ்துாரி பா சாலை தரம் உயர்த்தும் பணிகள், ஜூலை இறுதியில் முடிந்து, பொது மக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்படும்.சாலைகளின் பள்ளங்களை மூடுவது உட்பட, சில பணிகள் மட்டும் பாக்கியுள்ளது. மழை பெய்யாதிருந்தால், இப்பணிகளும் விரைந்து முடிக்கப்படும். ஊரடங்கு அமலில் இருந்ததால், மக்கள் நடமாட்டம், வாகனப்போக்குவரத்து குறைவாக இருந்தது.

இது பணிகளை முடிக்க, உதவியாக இருந்ததால், இந்த வாய்ப்பை பயன்படுத்தினோம்.பெங்களூரில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், மொத்தம் 31 சாலைகள் அபிவிருத்தி செய்யப்படுகிறது. இவற்றில் 21 சாலைகளின் பணிகள் முடிந்துள்ளன. காமராஜ் சாலை, அவென்யூ சாலை, ரேஸ்கோர்ஸ் சாலை, ஹலசூரு சாலை, ராஜ்பவன் சாலை கோளரங்கம் சாலைகளின் பணிகள் பாக்கியுள்ளது.

குறிப்பிட்ட நாட்களுக்குள், பணிகளை முடிக்க முடியாவிட்டால், சாலைப்பள்ளங்களை மூடி, ஒரு பக்கத்தில், மக்களின் போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்படும்.எம்.ஜி.சாலை, சிவாஜி சாலை, பாலகுந்த்ரி சதுக்கம், ரிச்மன்ட் சாலை, ரெசிடென்சி சாலை, அலி அஸ்கர் சாலையிலும் கூட, பணிகள் நடக்கிறது.பணிகளுக்கு தேவையான தொழிலாளர்கள் கிடைக்கவில்லை. பலரும் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். ஊரடங்கால் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டது. எனவே கோப்புகள் தேங்கி, பணிகளுக்கு அனுமதி பெறுவது தாமதமாகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X