பொது செய்தி

இந்தியா

சின்ன சின்னதாய்

Added : ஜூன் 17, 2021
Share
Advertisement
ராங்கா கேள்வி கேட்டா...ப.பேட்டை கைக்கார ச.ம.உ.,விடத்தில், 'ரோடு போட்டீங்க, கால்வாய் கட்டினீங்க, பஸ் ஸ்டாப் அமைச்சீங்க. ஒண்ணாவது உருப்படியா இருக்குதா. அதனாலே, கிராமடெவலப்மெண்ட் பத்தி எதையும் பேசாதீங்க.'ரொம்ப கஷ்டத்தில் இருக்கிறோம். சாப்பாட்டுக்கு வழியை சொல்லுங்க' ன்னுகட்டகாமதேன ஹள்ளி கிராமத்து பெரிசுங்க சொன்னாங்க.அதுக்கு அவரோ, 'சோறு போடுற வேலை எம்.எல்.ஏ.,க்கு

ராங்கா கேள்வி கேட்டா...ப.பேட்டை கைக்கார ச.ம.உ.,விடத்தில், 'ரோடு போட்டீங்க, கால்வாய் கட்டினீங்க, பஸ் ஸ்டாப் அமைச்சீங்க. ஒண்ணாவது உருப்படியா இருக்குதா. அதனாலே, கிராமடெவலப்மெண்ட் பத்தி எதையும் பேசாதீங்க.'ரொம்ப கஷ்டத்தில் இருக்கிறோம். சாப்பாட்டுக்கு வழியை சொல்லுங்க' ன்னுகட்டகாமதேன ஹள்ளி கிராமத்து பெரிசுங்க சொன்னாங்க.அதுக்கு அவரோ, 'சோறு போடுற வேலை எம்.எல்.ஏ.,க்கு கெடையாது. நீங்க எல்லாம் யாருக்கு ஓட்டுப்போட்டீங்க. அங்கே போய் கேளுங்கன்னு' சொன்னாரு.பிளாக் லிஸ்ட்டில் இருக்க வேண்டிய கான்ட்ராக்ட்காரரோடு, கமிஷனுக்குஒத்துப் போயிருக்கீங்க. தேர்தல் நேரத்தில் வந்தீங்க அதுக்கு அப்புறம்இப்போ தான் தரிசனம் காட்றீங்கன்னு கிராமத்து யூத்துங்க தாளிச்சிட்டாங்களாம்.ராங்கா கேள்விக்கேட்டவங்க எல்லாம் பூ காரங்கன்னு, அவர் காதுல சிலரு பூ சொருகிட்டாங்களாம். கை காரருக்கு எதிர்ப்பு நெரிக்கிறதுன்னு இப்போ தான் புரிஞ்சிருக்காம்.தப்பை இவங்க செய்யலாமா?தொற்று பரவாம இருக்க, சமூக இடை வெளி கட்டாயம் கடைபிடிக்க வேணும்.கூட்டம் ஜாஸ்தி சேரக்கூடாது. பர்த் டே, பங்ஷன், கோவில் திருவிழா நடத்த கூடாது என கவர்மென்ட் உத்தரவு இருக்குது.விதி மீறுறவங்க மீது வட்டாட்சி பெண் ஆபிசரு வழக்கும் போட்டாரு.ஆனால், அவரோட ஆபிஸ் காம்பவுண்டுல்ல அவரே நிவாரண உதவி வழங்கறப்ப, 100 பேரு சேர்ந்தாங்களே, இதுக்கு யாரு வழக்கு பதிவு செய்யப்போவது. பெர்ர்ய ஆளுங்க விதிமுறை மீறுற தப்பெல்லாம் செய்யலாமா.அன்பளிப்பு பேர்ல ஆப்பு!பாத்திரம் அறிஞ்சி பிச்சைப்போடுங்கிறது பழைய டயலாக். ஆனால், தர்மம் யாரிடத்தில் வாங்குறோம்னு பாத்து வாங்கணும் என்பது தான் புது டயலாக்.எலக் ஷன்ல போட்டிப் போடுற அரசியல்வாதிங்க இடத்தில் கஷ்டத்துக்கு, அவங்க தருகிற உணவுப்பொருளை வாங்குறவங்க 100 முறை கட்டாயம் யோசிக்கணும்.ஒரு வேளை தர்மம் பண்ற, ஆளு எலக் ஷன்ல தோத்துப்புட்டா எப்போ கொடுத்த தர்மத்தையெல்லாம் திருப்பி கேட்பாங்க. உஷாரா இருக்கோணும்.எலக் ஷன் நேரத்தில் வேட்பாளருங்க பாட்டுக்கு பட்டுவாடா செஞ்சாங்க. அவங்க ஜெயிக்காம போனதால், கொடுத்த பணத்தை நிக்க வெச்சி பறிச்சிட்டு போனாங்கஅவரால் அமைக்கப்பட்ட போர்வெல் குழாய் பைப்புகளை உடைச்சி நாசமாக்கினாங்க. அதனாலே இதையெல்லாம் ஞாபகப்படுத்திக்க வேணும்.அரசியல்வாதிங்க கொடுக்கிற அன்பளிப்பு என்பது நாளைய ஆப்புன்னு, பாதிக்கப்பட்டவங்களுக்கு ஞானோதயம் வந்திருப்பதாலே மற்றவர்களுக்கு புத்தி சொல்றாங்க. கேட்டால் கேளுங்க, என்கிறாங்க.ரூ.2,000க்கு 200 கமிஷனு!ஏழைக்கூட்டம் ஜாஸ்தி இருப்பதால, அவர்களிடம் பி.எம்., - சி.எம்., நிவாரண நிதி வாங்கி தருவதா, சில செல்லாக்காசு சில்லரை அரசியல்வாதிங்க பணம் பறிக்கிற வேலையில கெளம்பி இருக்காங்க.பி.பி.எல்., கார்டு இருந்தா போதுமாம். 2,000 ரூபாய், கவர்மெண்ட் தர்றாங்களாம். அதை வாங்கி தர, 200 ரூபாய் கேட்டு பாக்கெட்டு நிரப்பும் புது வித வேலையை, இதுவே ஒரு வேலையாக தொடங்கி இருக்காங்க.சுமாரா 100 வீட்டுல டார்க்கெட்முடிச்சிருக்காங்களாம். அதென்ன நிவாரணமோ. இந்த சமாச்சாரம் காக்கி சட்டை, ஆபிசு வரைக்கும் எட்டியிருக்காம். உள்ளூரு தலைவர்களோட காதுக்கும் போயிருக்காம்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X