பொது செய்தி

இந்தியா

சின்ன சின்னதாய்...

Added : ஜூன் 17, 2021
Share
Advertisement
மாணவர் சேர்க்கை 'டல்'ஜூலை 15 முதல், நடப்பு கல்வி ஆண்டு துவங்குவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. மாணவர் சேர்க்கை, இம்மாதம் 15 முதல் துவக்கலாம் என அனுமதித்ததால், தங்கவயலில் உள்ள பல பள்ளிகளின் அலுவலகங்கள் திறந்துள்ளனர்.மாணவர்கள் சேர்க்கைக்கு ஆசிரியர்கள் எதிர்நோக்கி காத்திருந்தனர். ஆயினும், எதிர்ப்பார்த்தப்படி சேர்க்கைக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்றே பல

மாணவர் சேர்க்கை 'டல்'ஜூலை 15 முதல், நடப்பு கல்வி ஆண்டு துவங்குவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. மாணவர் சேர்க்கை, இம்மாதம் 15 முதல் துவக்கலாம் என அனுமதித்ததால், தங்கவயலில் உள்ள பல பள்ளிகளின் அலுவலகங்கள் திறந்துள்ளனர்.மாணவர்கள் சேர்க்கைக்கு ஆசிரியர்கள் எதிர்நோக்கி காத்திருந்தனர். ஆயினும், எதிர்ப்பார்த்தப்படி சேர்க்கைக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்றே பல பள்ளிகளிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கிறது.அரசுப் பள்ளி ஆசிரியர்கள், வீடு வீடாக சென்று மாணவர்கள் சேர்க்கைக்கு அழைப்பு விடுத்துள்ளதைப்போல், தனியார் பள்ளிகளும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதை காண முடிகிறது.ரூ.2 லட்சம் மது பறிமுதல்சட்டவிரோதமாக, தங்கவயலில் இருந்து தமிழகத்துக்கு மதுபானம் கடத்தி செல்வதாக கலால் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் சோதனையில் இரண்டு மோட்டார் பைக்குகளில் மதுபானம் கடத்திச் சென்ற ராஜேந்திரா, 45, கலீல் 38, ஆகியோரை கைது செய்தனர். 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 45 லிட்டர் மதுபானம், இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.காங்கிரஸ் போராட்டம்பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தங்கவயல் தொகுதி கேசம்பள்ளி பெட்ரோல் பங்க் எதிரில் தங்கவயல் கிராம பகுதி பிளாக் காங்கிரஸ் சார்பில் நேற்று முன்தினம் தர்ணா நடந்தது.ஏ.பி.எம்.சி., தலைவர் விஜய ராகவ ரெட்டி கூறியதாவது:இலங்கையில் 1 லிட்டர் பெட்ரோல், 50 ரூபாய்க்கு கிடைக்கிறது.நம் நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, 100 ரூபாயாக விற்கப்படுகிறது. கர்நாடகாவில் ஊரடங்கால் வேலை இல்லை. பல்வேறு பாதிப்புகள் உள்ளன. பெட்ரோல் விலை உயர்வால் பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.லட்சுமி நாராயணா, ராதாகிருஷ்ணா ரெட்டி, பாலகிருஷ்ணா உட்பட பலர் பங்கேற்றனர்.மருத்துவ பொருட்கள் வழங்கல்தங்கவயல் அரசு பொது மருத்துவமனைக்கு கொரோனா நோயாளிகளின் பயன் பாட்டுக்கு தேவைப்படும் மருந்து வகைகள், மருத்துவ உபகரணங்களை, தலைமை மருத்துவர் சிவகுமாரிடம், 'யங் ரிபர்ஸ் பார் கிரைஸ்ட் டிரஸ்ட்' சார்பில் போதகர்காட்வின் மதுசூதன் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X