சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்னை கொண்டுவரப்பட்டார் சிவசங்கர் பாபா

Updated : ஜூன் 17, 2021 | Added : ஜூன் 17, 2021 | கருத்துகள் (44+ 59)
Share
Advertisement
சென்னை: பள்ளி மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தப்பிச் சென்ற, கேளம்பாக்கம் சாமியார் சிவசங்கர் பாபாவை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் டில்லியில் நேற்று கைது செய்தனர். நேற்று(ஜூன் 16) இரவு அவர் சென்னை கொண்டு வரப்பட்டார்.சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள 'சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்ஷியல்' பள்ளியை, தன்னை ஆன்மிக குருவாக கூறிக் கொள்ளும் சிவசங்கர் பாபா நடத்தி
சென்னை, சிவசங்கர் பாபா

சென்னை: பள்ளி மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தப்பிச் சென்ற, கேளம்பாக்கம் சாமியார் சிவசங்கர் பாபாவை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் டில்லியில் நேற்று கைது செய்தனர். நேற்று(ஜூன் 16) இரவு அவர் சென்னை கொண்டு வரப்பட்டார்.

சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள 'சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்ஷியல்' பள்ளியை, தன்னை ஆன்மிக குருவாக கூறிக் கொள்ளும் சிவசங்கர் பாபா நடத்தி வருகிறார். அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக, மூன்று மாணவியர் புகார் அளித்தனர். பள்ளி நிர்வாகத்தினர் சிலர் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது.அதன்படி, சிவசங்கர் பாபா மீது, 'போக்சோ' உள்ளிட்ட ஆறு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பாலியல் தொல்லை தொடர்பாக முக்கிய ஆதாரங்கள் கிடைத்ததால், அவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கினர்.


latest tamil news




இந்நிலையில், உடல்நலக்குறைவு எனக் கூறி, உத்தரகண்ட் மாநிலம், டேராடூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிவசங்கர் பாபாவிடம் விசாரிக்க டி.எஸ்.பி., குணவர்மன், இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், எஸ்.ஐ., ஸ்டீபன் ஆகியோர் சென்றனர். சி.பி.சி.ஐ.டி., போலீசார் வருவதை அறிந்த அவர், உத்தரகண்ட் மாநிலத்தில் இருந்து டில்லிக்கு தப்பினார். டில்லியில் அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

அவர் டில்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.பின்னர் அவர் விமானம் மூலம் இரவு 12 மணியளவில் சென்னைக்கு கொண்டு வரப்பட்டார்.அவரை சென்னை எழும்பூர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில்வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (44+ 59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muga Kannadi - chennai,இந்தியா
17-ஜூன்-202121:41:50 IST Report Abuse
Muga Kannadi நம்ப நித்திகெல்லாம் முன்னோடி. 1997 - 98 -2000 பீரியட்டீல் இவரு தான் ட்ரெண்டிங். ஜூனியர் விகடன் முதல் suntv மற்றும் எல்லா பத்திரிகைகலீல் வந்த கதைகளில் எங்க தல தான் கதாநாயன் . youtube , கூகிள் online வருவதற்கு எல்லாம் முன்னோடி இவரின் டான்ஸ் தான் பிரபலம். இருபது வருஷத்துக்கு மேல மீடியா கண்ணுல படாம வாழ்த்துட்டு இருக்கிற அப்பேற்பட்ட எங்க தலையை இப்போ புடிச்சி என்ன பண்ணபோறீங்க...
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
17-ஜூன்-202114:24:27 IST Report Abuse
அசோக்ராஜ் எப்படி முட்டு கொடுக்கீர் உங்கள் வீட்டு பெண்கள் பாதித்தால் இப்படி பேசுவாரா ஆதாரம் இல்லாமல் கைது செய்ய முடியுமா ? "// கனிமொழியும் ராசாவும் சிதம்பரமும் கார்த்தியும் திகார் வாசம் செய்தது ஆதாரம் இருந்ததால் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். பாபா ரிலீஸ் ஆகும்போது கனிமொழிக்கு கொடுத்த அதே வரவேற்பு கொடுக்க வேண்டும். அதுதான் சமூகநீதி.
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
17-ஜூன்-202114:20:06 IST Report Abuse
g.s,rajan இவன் ஒரு போலி சாமியார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X