பொது செய்தி

இந்தியா

4 தொகுதிகளுக்கு ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை

Added : ஜூன் 17, 2021
Share
Advertisement
பெங்களூரு-''பெங்களூரின் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் தலா, 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையும், 4 தொகுதிகளுக்கு ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும் கட்டப்படும்,'' என துணை முதல்வர் அஸ்வத் நாராயணா தெரிவித்தார்.பெங்களூரு நகர கொரோனா தடுப்பு நிர்வகிப்பு பொறுப்பை துணை முதல்வர் அஸ்வத் நாராயணா, நிர்வகித்து வருகிறார்.கொரோனா குறித்து, மாநகராட்சி கமிஷனர் கவுரவ்

பெங்களூரு-''பெங்களூரின் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் தலா, 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையும், 4 தொகுதிகளுக்கு ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும் கட்டப்படும்,'' என துணை முதல்வர் அஸ்வத் நாராயணா தெரிவித்தார்.

பெங்களூரு நகர கொரோனா தடுப்பு நிர்வகிப்பு பொறுப்பை துணை முதல்வர் அஸ்வத் நாராயணா, நிர்வகித்து வருகிறார்.கொரோனா குறித்து, மாநகராட்சி கமிஷனர் கவுரவ் குப்தா, சுகாதார துறை உயர் அதிகாரிகளுடன் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.எங்கெங்கு மருத்துவமனைகள் கட்ட வேண்டும், எந்தெந்த தொகுதிக்கு தேவை, எங்கெல்லாம் மருத்துவமனை கட்ட இடம் உள்ளது உட்பட பல விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.ஒன்றரை மணி நேர ஆலோசனைக்கு பின், அஸ்வத் நாராயணா கூறியதாவது:பெங்களூரின் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் தலா, 100 படுக்கை கொண்ட மருத்துவமனையும், நான்கு தொகுதிகளுக்கு ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும் கட்டப்படும்.அடுத்த, 15 நாட்களில் திட்ட அறிக்கை தயாரித்து சமர்பிக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒன்றரை கோடி மக்கள் பெங்களூரில் வசிக்கின்றனர். தினமும் 50 லட்சம் பேர் வந்து செல்கின்றனர்.அதற்கேற்றவாறு சுகாதாரத்துக்கு முன்னுரிமை வழங்கி வருகிறோம். அனைத்து வார்டுகளிலும் ஆரம்ப சுகாதார மையங்கள் அமைக்கப்படும். ஏற்கனவே உள்ள மையங்கள் நவீனப்படுத்தப்படும்.படிப்படியாக ஊரடங்கு தளர்வு செய்யப்படுவதால், வெளி நகரங்களிலிருந்து பெங்களூருக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இந்த வகையில், தொற்று பரவல் கட்டுப்படுத்த, தினமும், 75 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும்.எப்போது வேண்டுமானாலும் கொரோனா பரவல் அதிகமாகலாம் என்பதால், ஒப்பந்த சுகாதார ஊழியர்கள் யாரையும் பணியிலிருந்து விடுவிக்காமல் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த மாதத்துக்குள், 80 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுவது அரசின் இலக்கு. சில தொகுதிகளில், 95 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X