பொது செய்தி

இந்தியா

குழந்தைகள் டாக்டர்கள் நடை, கிரமங்களை நோக்கி' திட்டம் துவக்கி வைப்பு

Added : ஜூன் 17, 2021
Share
Advertisement
பெங்களூரு-பெங்களூரு ரூரல், தேவனஹள்ளி தாலுகா அலுவலக வளாகத்தில், 'குழந்தைகள் டாக்டர்கள் நடை, கிராமங்களை நோக்கி' என்ற திட்டத்தை, வருவாய் துறை அமைச்சர் அசோக் நேற்று துவக்கி வைத்தார்.பின் அவர் கூறியதாவது:இது சோதனை முறை திட்டமாகும். குழந்தைகள் டாக்டர்கள், கிராமம், கிராமமாக சென்று அங்குள்ள குழந்தைகளின் ஆரோக்கியத்தை, பரிசோதிக்க வேண்டும்.ஊட்டச்சத்து குறைபாடுள்ள

பெங்களூரு-பெங்களூரு ரூரல், தேவனஹள்ளி தாலுகா அலுவலக வளாகத்தில், 'குழந்தைகள் டாக்டர்கள் நடை, கிராமங்களை நோக்கி' என்ற திட்டத்தை, வருவாய் துறை அமைச்சர் அசோக் நேற்று துவக்கி வைத்தார்.பின் அவர் கூறியதாவது:இது சோதனை முறை திட்டமாகும். குழந்தைகள் டாக்டர்கள், கிராமம், கிராமமாக சென்று அங்குள்ள குழந்தைகளின் ஆரோக்கியத்தை, பரிசோதிக்க வேண்டும்.ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு, ஊட்டச்சத்து நிறைந்த மருந்துகள் கொடுப்பர்.தற்போது பெங்களூரு ரூரலில், 18 க்கும் குறைவான வயதுள்ள, 2 லட்சத்து 72 ஆயிரத்து 910 பிள்ளைகள், அங்கன்வாடியில் ஆறு வயதுக்கும் குறைவான, 58 ஆயிரத்து 637 பிள்ளைகள் உள்ளனர்.ஊட்டச்சத்தால் 860 குழந்தைகள் அவதிப்படுவதாக, தெரிய வந்துள்ளது. எல்லைப்பகுதியிலும், 1,200 குழந்தைகள் ஊட்டச்சத்து கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த, 'சிறப்பு கிட்' தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் பெங்களூரு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் தயாரான, பாதாம் பவுடர் 200 கிராம், பால் பவுடர்.சர்க்கரை தலா 500 கிராம், பிஸ்கட்டுகள், மல்டி வைட்டமின் டானிக், முக கவசம், டெட்டால் சோப் இருக்கும். இதன் மூலம் குழந்தைகளின் ஊட்டச்சத்தை அதிகரிக்கலாம்.குழந்தைகளுக்காக, ஆகாஷ் மருத்துவமனையில், 25 படுக்கைகள், சித்தார்த் மருத்துவமனையில், 50 படுக்கைகள், எம்.இ.ஜெ.மருத்துவமனையில், 25 படுக்கைகள், தயார் நிலையில் உள்ளது.குழந்தைகளின் ஆரோக்கிய பாதுகாப்புக்காக, பல முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும், குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் உருவாக்கப்படுகிறது. கொரோனா மூன்றாவது அலையை கட்டுப்படுத்த, தேவையான நிதி வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X