பொது செய்தி

இந்தியா

எடியூரப்பா செயல்பாடு சிறப்பு: முதல்வர் மாற்றம் என்ற கேள்விக்கே இடம் இல்லை

Added : ஜூன் 17, 2021
Share
Advertisement
பெங்களூரு-''முதல்வர் எடியூரப்பா சிறப்பாக செயல்படுகிறார். எனவே, முதல்வர் மாற்றம் என்ற கேள்விக்கே இடமில்லை. அது தொடர்பான எந்த விவாதமும் நடக்கவில்லை. பா.ஜ.,வில் எந்த குழப்பமும் இல்லை,'' என, பா.ஜ., மாநில பொறுப்பாளர் அருண் கூறினார். முதல்வரை மாற்ற வேண்டும் என முயற்சித்த அதிருப்தியாளர்களை அவர் கண்டித்துள்ளார்.கர்நாடக முதல்வர் எடியூரப்பா, 78, தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுக்கு

பெங்களூரு-''முதல்வர் எடியூரப்பா சிறப்பாக செயல்படுகிறார். எனவே, முதல்வர் மாற்றம் என்ற கேள்விக்கே இடமில்லை. அது தொடர்பான எந்த விவாதமும் நடக்கவில்லை. பா.ஜ.,வில் எந்த குழப்பமும் இல்லை,'' என, பா.ஜ., மாநில பொறுப்பாளர் அருண் கூறினார்.

முதல்வரை மாற்ற வேண்டும் என முயற்சித்த அதிருப்தியாளர்களை அவர் கண்டித்துள்ளார்.கர்நாடக முதல்வர் எடியூரப்பா, 78, தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுக்கு மட்டும் கூடுதல் நிதி ஒதுக்குவதாகவும், மற்றவர்களுக்கு குறைத்து நிதி ஒதுக்குவதாகவும், பிற எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தி அடைந்தனர்.அதிருப்தியாளர்கள் பா.ஜ., மேலிட தலைவர்களை சந்தித்து முதல்வரை மாற்றும்படி கோரிக்கை விடுத்தனர்.

ஆலோசனை

ஆனால், மாநில பா.ஜ., பொறுப்பாளர் அருண் சிங், 'எந்த காரணத்தை கொண்டும் முதல்வர் மாற்றப்பட மாட்டார். எனினும், அனைத்து விவகாரங்களையும் விவாதிக்க, விரைவில் பெங்களூரு வருகிறேன்' என்றார். அதன்படி டில்லியிலிருந்து விமானம் மூலம் அருண் சிங், நேற்று மாலை பெங்களூரு வந்தார். குமாரகிருபா அரசினர் விருந்தினர் மாளிகைக்கு சென்று சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். பின், மல்லேஸ்வரத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு சென்றார்.நான்காவது மாடியில் உள்ள மாநாட்டு அரங்கில் அமைச்சர்களுடன் நேற்றிரவு ஆலோசனை நடத்தினார்.

மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், முதல்வர் எடியூரப்பாவும் பங்கேற்றார்.முதல்வர் மீது மேலிடத்தில் புகார் செய்திருந்த, சுற்றுலா துறை அமைச்சர் யோகேஸ்வர் தவிர மற்றவர்கள் அனைவரும் முன் கூட்டியே வந்திருந்தனர்.கொரோனா தொற்று பரவல் நிர்வகிப்பு, துறை திட்டங்களில் செய்துள்ள சாதனை, கட்சி எம்.எல்.ஏ.,க்கள் உடனான ஒருங்கிணைப்பு ஆகியவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.பின், அருண் சிங்குடன் தனிப்பட்ட முறையில் ரகசியமாக பேச விரும்பியவர்கள், ஒவ்வொருவராக வரவழைக்கப்பட்டு ஆலோசனை நடத்தினார். அப்போது, அதிருப்தியாளர்களுக்கு அருண் சிங் செம டோஸ் விட்டதாக கூறப்படுகிறது.எனினும், பெரும்பாலான அமைச்சர்கள் முதல்வருக்கு ஆதரவாக பேசியுள்ளனர். மேலிடம் நம்பிக்கைஒரு சில அமைச்சர்கள், தங்கள் துறைகளில் முதல்வரின் இளைய மகன் விஜயேந்திரா தலையிடுவதாகவும், தங்களுக்கே தெரியாமல் துறையின் நிதியை முதல்வர் எடுத்து வேறு திட்டங்களுக்கு செலவழிக்கிறார் உட்பட அடுக்கடுக்கான புகார்கள் கூறியுள்ளனர்.

இறுதியில், 'அனைத்தையும் முதல்வர் பார்த்துகொள்வார். அவர் தலைமை மீது மேலிடம் உரிய நம்பிக்கை வைத்துள்ளது. நமது பூசலால் காங்கிரசுக்கு லாபம் ஆகி விட கூடாது. 'எனவே அனைவரும் எடியூரப்பாவுக்கு ஒத்துழைப்பு தந்து, கொரோனா நிர்வகிக்கும் பணியை சீராக செய்து, 2023ல் மீண்டும் பா.ஜ., ஆட்சியை பிடிக்க உழைக்க வேண்டும். பகிரங்கமாக எதுவும் பேச கூடாது' என்று, அருண் சிங் கூறியதாக தெரிகிறது.இரண்டரை மணி நேரம் தொடர் ஆலோசனைக்கு பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:முதல்வர் எடியூரப்பா சிறப்பாக செயல்படுகிறார். எனவே முதல்வர் மாற்றம் என்ற கேள்விக்கே இடமில்லை. அந்த கேள்வியும் எழவில்லை. அது தொடர்பான எந்த விவாதமும் நடக்கவில்லை.

பா.ஜ.,வில் எந்த குழப்பமும் இல்லை.கொரோனா தொற்று பரவல் குறித்து மட்டுமே ஆலோசித்தோம். மத்திய, மாநில அரசு திட்டங்களை வீடு வீடாக கொண்டு சேர்க்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஒவ்வொரு வியாழக்கிழமையும் அமைச்சர்கள் அவரவர் அலுவலகத்தில் இருந்து, எம்.எல்.ஏ.,க்கள், கட்சி பிரமுகர்களின் பிரச்னைகளை தீர்க்கும்படி கூறியுள்ளோம். மாவட்டங்களுக்கு செல்லும் போது உள்ளூர் தொண்டர்களின் பிரச்னைகளை தீர்க்க வேண்டும்.1 லட்சம் ரூபாய்நாட்டிலேயே எங்கும் அமல்படுத்தப்படுத்தாத கொரோனாவால் இறந்த ஏழைகளுக்கு, ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்குவதாக முதல்வர் அறிவித்துள்ளார். ஊரடங்கால் அவதிப்பட்ட சிறு, குறு தொழிலாளர்கள் உட்பட பலருக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

அவரது பேச்சு, முதல்வர் எடியூரப்பா எந்த காரணத்துக்கும் மாற்றப்பட மாட்டார் என்பதை மீண்டும் உறுதியாக்கிஉள்ளது.இன்று எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்தி, அவர்களின் புகார், கருத்துக்களையும் கேட்கவுள்ளார். 70 வயதுக்கு மேற்பட்ட அமைச்சர்களை நீக்கிவிட்டு, இளைஞர்களுக்கு அமைச்சர் பதவியில் வாய்ப்பு தரும்படி வலியுறுத்த, பல எம்.எல்.ஏ.,க்கள் ஒற்றை காலில் நிற்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X