பொது செய்தி

இந்தியா

25 முறை ரத்த தானம் செய்து மாற்றுத்திறனாளி அபாரம்

Added : ஜூன் 17, 2021
Share
Advertisement
மும்பை,:மஹாராஷ்டிராவில் மாற்றுத்திறனாளி ஒருவர் 25 முறை ரத்த தானம் செய்து பலரின் பாராட்டை பெற்றுள்ளார்.மஹாராஷ்டிராவில் மும்பை பெருநகர் வளர்ச்சி ஆணையத்தின் செயல் இயக்குனராக பிரவின் பண்டேகர் உள்ளார். திக்கிப் பேசும் குறைபாடு உள்ள இவரின் இடது கை சிறுவயதிலேயே செயலிழந்து விட்டது. எனினும் இவர் 18 ஆண்டுகளாக வலது கையில் ரத்த தானம் செய்து வருகிறார்.இது குறித்து பிரவின்
25 முறை ரத்த தானம் , மாற்றுத்திறனாளி அபாரம்

மும்பை,:மஹாராஷ்டிராவில் மாற்றுத்திறனாளி ஒருவர் 25 முறை ரத்த தானம் செய்து பலரின் பாராட்டை பெற்றுள்ளார்.

மஹாராஷ்டிராவில் மும்பை பெருநகர் வளர்ச்சி ஆணையத்தின் செயல் இயக்குனராக பிரவின் பண்டேகர் உள்ளார். திக்கிப் பேசும் குறைபாடு உள்ள இவரின் இடது கை சிறுவயதிலேயே செயலிழந்து விட்டது. எனினும் இவர் 18 ஆண்டுகளாக வலது கையில் ரத்த தானம் செய்து வருகிறார்.இது குறித்து பிரவின் பண்டேகர் கூறியதாவது:
கல்லுாரி பருவத்தில் இருந்து நான் ரத்த தானம் செய்து வருகிறேன். இதுவரை 25 முறை ரத்த தானம் செய்துள்ளேன். என் ரத்தம் அனைவருக்கும் பொருந்தக்கூடிய 'ஓ' பாசிட்டிவ் வகையை சேர்ந்தது. அதனால் அடிக்கடி மும்பை வந்து ரத்த தான முகாம்களில் பங்கேற்பேன். கொரோனா காலத்திலும் பல மருத்துவமனைகளுக்கு சென்று ரத்த தானம் செய்துள்ளேன். ரத்தம் கொடுத்த பின் நோயாளிகளின் உறவினர்கள் கையெடுத்து கும்பிட்டு நன்றி தெரிவிப்பர். இதை விட சிறந்த மகிழ்ச்சி எனக்கு வேறு எதுவும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.இதையடுத்து மாற்றுத்திறனாளி பிரவின் பண்டேகர் சேவைக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X