இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'

Updated : ஜூன் 17, 2021 | Added : ஜூன் 17, 2021
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள்கார் - லாரி மோதல்: 9 பேர் பரிதாப பலிஆனந்த்-குஜராத்தில், கார் மீது லாரி மோதிய விபத்தில், இரு குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பரிதாபமாக பலியாயினர்.குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது.இங்கு, சவுராஷ்டிரா மக்கள் அதிகமுள்ள பாவ்நகர் மாவட்டத்தின் வார்தேஜ் பகுதியை சேர்ந்தவர்கள், மஹாராஷ்டிராவில் இருந்து காரில் சொந்த ஊர்
today, crime, round up, இன்றைய, கிரைம், ‛ரவுண்ட் அப்'


இந்திய நிகழ்வுகள்

கார் - லாரி மோதல்: 9 பேர் பரிதாப பலி

ஆனந்த்-குஜராத்தில், கார் மீது லாரி மோதிய விபத்தில், இரு குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பரிதாபமாக பலியாயினர்.குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது.

இங்கு, சவுராஷ்டிரா மக்கள் அதிகமுள்ள பாவ்நகர் மாவட்டத்தின் வார்தேஜ் பகுதியை சேர்ந்தவர்கள், மஹாராஷ்டிராவில் இருந்து காரில் சொந்த ஊர் வந்து கொண்டு இருந்தனர்.நேற்று காலை, குஜராத்தின் ஆனந்த் மாவட்டம் இந்திரனாஜ் கிராமம் அருகே வந்த போது, அவர்கள் கார் மீது, எதிரே வந்த லாரி மோதியது.இந்த விபத்தில், காரில் இருந்த, 5 வயதிற்கு உட்பட்ட இரு குழந்தைகள் உட்பட, ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். போலீசார் உடல்களை மீட்டு, பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பலியானோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, 'தேசிய நிவாரண நிதியில் இருந்து, தலா, 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும்' எனக் கூறி உள்ளார்.

'மாவோயிஸ்டு'கள் சுட்டுக்கொலை

அமராவதி: ஆந்திராவின் விசாகப்பட்டினம் மாவட்டம், மம்பா வனப்பகுதியில் பதுங்கி இருந்த, 'மாவோயிஸ்ட்' இயக்கத்தினரை, போலீசார் நேற்று சுற்றி வளைத்தனர்.இரு தரப்பினருக்கும் இடையே நடந்த 'என்கவுன்டரில்' ஒரு பெண் உட்பட ஆறு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். அவர்கள் பயன்படுத்திய 'ஏகே' ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன

பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் நவ்காமை அடுத்த வாகூரா பகுதியில், பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதை அறிந்த பாதுகாப்பு படையினர், நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் யார், எந்த இயக்கத்தை சேர்ந்தவர் என, விசாரணை நடைபெறுகிறது


latest tamil news


முன்னாள் எம்.எல்.ஏ., கைது

மும்பை: மஹாராஷ்டிராவில் மும்பைக்கு அருகிலிருக்கும் பன்வெல் கூட்டுறவு வங்கியில், 512 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., விவேகானந்த் எஸ்.பட்டீல், 66, என்பவரை, அமலாக்க இயக்குனரக அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தனர்.


தமிழக நிகழ்வுகள்


latest tamil news


கர்ப்பமாக இருப்பதாக நாடகமாடிய பெண் உண்மை தெரிந்ததால் தற்கொலை

மாதவரம்-மாதவரத்தில், மாமியார் வீட்டினர் ஏற்படுத்திய மன உளைச்சலால், கர்ப்பமாக இருப்பதாக நாடகமாடிய இளம்பெண், உண்மை தெரியவர, விரக்தியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாதவரம் அடுத்த மூலக்கடை, பெரியார் நகரைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 34. இவரது மனைவி கனிமொழி, 25. தம்பதிக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. குழந்தை இல்லாததால், புகுந்த வீட்டினரால் மன உளைச்சலுக்கு ஆளானார். அவர்களை சமாளிக்க, ஆறு மாதத்திற்கு முன், 'கர்ப்பமாக உள்ளேன்' எனக் கூறியிருக்கிறார். இதையடுத்து, குடும்ப நெருக்கடி கொஞ்சம் தளர்ந்தது.இந்நிலையில், குடும்பத்தினரின் வற்புறுத்தலால், நேற்று முன்தினம் காலை கணவருடன், பெரம்பூரில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டருக்கு சென்று, பரிசோதனை மேற்கொண்டார்.

அன்று மாலை ரஞ்சித்குமார், பரிசோதனை முடிவை வாங்க சென்றார். அப்போது, கனிமொழி கர்ப்பமாக இல்லை என, தெரிய வந்தது. இது குறித்து விசாரிக்க அவர், மனைவிக்கு மொபைல் போனில் தொடர்பு கொண்டார். அவர் அழைப்பை ஏற்கவில்லை.அதனால், ரஞ்சித்குமார் வீட்டிற்கு சென்றார். அப்போது கனிமொழி, படுக்கை அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.கர்ப்பமாக இருப்பதாக சொன்ன பொய், மருத்துவ பரிசோதனை மூலம் தெரியவந்ததால் ஏற்பட்ட அச்சம் காரணமாக, கனிமொழி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியது.இது குறித்து, மாதவரம் போலீசார் விசாரிக்கின்றனர். ஆர்.டி.ஓ., விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.


latest tamil news


பாலியல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபா சென்னை கொண்டு வரப்பட்டார்

சென்னை: பள்ளி மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தப்பிச் சென்ற, கேளம்பாக்கம் சாமியார் சிவசங்கர் பாபாவை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் டில்லியில் நேற்று கைது செய்தனர். இன்று இரவு அவர் சென்னை கொண்டு வரப்பட்டார்.

குண்டு வீசி வாலிபர் கொலை பெரும்பாக்கத்தில் 8 பேர் கைது

பெரும்பாக்கம்,--நாட்டு வெடிகுண்டு வீசி, வாலிபரை கொலை செய்த சம்பவத்தில், எட்டு பேரை போலீசார் கைது செய்தனர்.பெரும்பாக்கம், அண்ணா தெருவைச் சேர்ந்தவர் சரத்குமார், 25. நேற்று முன்தினம் இரவு, வீட்டு முன் அமர்ந்திருந்தார்.

அப்போது, எட்டு பேர் கொண்ட கும்பல், மூன்று நாட்டு வெடிகுண்டுகளை வீசி, சரத்குமாரை கொலை செய்தது.புகாரை விசாரித்த பெரும்பாக்கம் போலீசார், பள்ளிக்கரணையைச் சேர்ந்த வெற்றி, 25, வினோத், 24, திலிப், 28, உள்ளிட்ட எட்டு பேரை, நேற்று கைது செய்தனர்.இது குறித்து, போலீசார் கூறியதாவது: சரத்குமார், வெற்றி இருவரும் நண்பர்கள். சில மாதத்திற்கு முன், இருவருக்கும் பகை ஏற்பட்டுள்ளது. இதில், ஒருவரை ஒருவர் கொலை செய்து விடுவதாக சவால் விட்டுள்ளனர்.இதை, நண்பர்களிடம், வெற்றி கூறி, சரத்குமாரை கொல்ல திட்டமிட்டனர். திலிப், நாட்டு வெடிகுண்டு தயார் செய்து வழங்கி உள்ளார். பின், எட்டு பேரும் சேர்ந்து, சரத்குமாரை கொலை செய்துள்ளனர்.இவ்வாறு, போலீசார் கூறினர்.

விருத்தாசலம் நகரில் ஊரடங்கு விதியை மீறியவர்கள் கைது

விருத்தாசலம்-விருத்தாசலத்தில் ஊரடங்கு விதிமீறிய வாகன ஓட்டுனர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.விருத்தாசலத்தில் டி.எஸ்.பி., மோகன், இன்ஸ்பெக்டர் விஜயரங்கன், சப் இன்ஸ்பெக்டர்கள் ஜம்புலிங்கம், கணேசன் தலைமையில் புறவழிச்சாலை, பெரியார் நகர், பாலக்கரை ரவுண்டானா, மணலுார் நீதிமன்ற முகப்பு, ஜங்ஷன் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சோதனைச் சாவடிகள் மூலம் தீவிர வாகன சோதனை நடக்கிறது.நேற்று காலை முக கவசம் அணியாத மற்றும் ெஹல்மெட் அணியாத வாகன ஓட்டுனர்கள் மீது வழக்குப் பதியப்பட்டது. மேலும், முக கவசம் வழங்கி, சமூக இடைவெளி கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

சேத்தியாதோப்பு பகுதிகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 17 பேர் கைது

சேத்தியாத்தோப்பு-சேத்தியாத்தோப்பு உட்கோட்டத்தில் டி.எஸ்.பி., சுந்தரம் தனிப்படையினர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 17 பேரை கைது செய்தனர்.கடலுார் புதிய எஸ்.பி., சக்திகணேசன் நேற்று முன்தினம் பொறுப்பேற்றதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குற்றசம்பங்களில் ஈடுபடுவோரை கண்காணித்து போலீசார் கைது செய்து வருகின்றனர். சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி., சுந்தரம் மேற்பார்வையில், தனிப் படையின் சப்இன்ஸ்பெக்டர் செல்லபாண்டியன், சேத்தியாத்தோப்பு இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ், சப்இன்ஸ்பெக்டர் மாணிக்க ராஜா ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக சேத்தியாத்தோப்பு, ஒரத்துார், ஸ்ரீமுஷ்ணம், சோழத்தரம், புத்துார், காட்டுன்னார்கோவில், குமராட்சி ஆகிய பகுதிகளில் கள்ள மதுப்பாட்டிகள் விற்பனை, தடைசெய்யப்பட்ட லாட்டரி, கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை செய்தவர்கள் உட்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர்.இதில் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட 10 பேர், காட்டுமன்னார்கோவிலில் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்ற 5 பேர், கஞ்சா விற்ற இருவரை கைது செய்தனர்.

மாட்டு வியாபாரியை தாக்கிய வாலிபர் கைது

பரங்கிப்பேட்டை-பரங்கிப்பேட்டை அருகே மாட்டு வியாபாரியை தாக்கிய, வாலிபரை போலீசார் கைது செய்தனர்.பரங்கிப்பேட்டை காயிதேமில்லத் தெருவை சேர்ந்தவர் மக்துாம் அலி, 34; மாட்டு வியாபாரி. இவர் கடந்த 15ம் தேதி அகரத்தில், மாடுகளை விலைக்கு வாங்கி, மினி வேனில் ஏற்றினார். அதே பகுதியை சேர்ந்த அன்பு, தங்கம் ஆகியோர் மக்துாம் அலியிடம், தகராறு செய்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து, மக்துாம் அலி கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் தேவி வழக்குப் பதிந்து, அன்புவை, 31; கைது செய்தார். தங்கத்தை தேடி வருகிறார்.

சிறுமியிடம் அத்துமீறல்; வாலிபர் மீது போக்சோ

திருப்பூர் : திருப்பூரில், சிறுமியிடம் அத்தமீறிய வாலிபர் 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.திருப்பூரை சேர்ந்த, 17 வயது சிறுமி.

வீட்டுக்கு அருகே உள்ள அரசு பள்ளியில், பிளஸ் 2 படித்து வருகிறார். சிறுமிக்கு, வீட் டுக்கு அருகே பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்த உடுமலையை சேர்ந்த தவசி, 20 என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.ஆசை வார்த்தை கூறி பழகி வந்த தவசி, நேற்று முன்தினம் சிறுமியை அழைத்து கொண்டு மாயமானார். சிறுமியை திருமணம் செய்து, அவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறினார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், திருப்பூர் வடக்கு போலீசார் இருவரையும் உடுமலை அருகே, மீட்டனர். சிறுமியை கடத்தி குழந்தை திருமணம் செய்தல் மற்றும் 'போக்சோ' ஆகிய பிரிவின் கீழ் தவசி மீது வழக்கு பதிந்து, தவசியை கைது செய்தனர்.

போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

கூடலுார் : மசினகுடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த, 19 வயது இளைஞருக்கும், பழக்கம் ஏற்பட்டு, சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார்.இது குறித்து,'சைல்டு லைன்' மூலம் புகார் கிடைத்துள்ளது. ஊட்டி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சமூக பணியாளர், கூடலுார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இன்ஸ்பெக்டர் சுசிலா, எஸ்.ஐ., சுமதி வழக்குப்பதிவு செய்து, 19 வயது இளைஞரை 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X