பொது செய்தி

தமிழ்நாடு

பாம்பன் ரயில் பாலத்தில் விரிசல்: ரயில்கள் நிறுத்தம்

Added : ஜூன் 17, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம்:பாம்பன் ரயில் துாக்கு பால இரும்பு பிளேட்டில் விரிசல் ஏற்பட்டதால், ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.பாம்பன் ரயில் பாலத்தின் நடுவில் கப்பல், படகுகள் கடந்து செல்ல துாக்கு பாலம் உள்ளது.நேற்று அதிகாலை சென்னை, கோவையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில்கள் வந்த போது, துாக்கு பாலத்தில் அதிக சத்தம், அதிர்வு ஏற்பட்டது. பாலத்தில் பொருத்தியுள்ள சென்சார்
 பாம்பன் ரயில் பாலத்தில் விரிசல்: ரயில்கள் நிறுத்தம்

ராமேஸ்வரம்:பாம்பன் ரயில் துாக்கு பால இரும்பு பிளேட்டில் விரிசல் ஏற்பட்டதால், ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.பாம்பன் ரயில் பாலத்தின் நடுவில் கப்பல், படகுகள் கடந்து செல்ல துாக்கு பாலம் உள்ளது.நேற்று அதிகாலை சென்னை, கோவையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில்கள் வந்த போது, துாக்கு பாலத்தில் அதிக சத்தம், அதிர்வு ஏற்பட்டது. பாலத்தில் பொருத்தியுள்ள சென்சார் கருவியிலும் அதிக அதிர்வலைகள் பதிவானது.இதையடுத்து துாக்கு பாலத்தில் கோட்ட ரயில்வே பொறியாளர் கிரீஸ்குமார், பாம்பன் பால பொறியாளர்கள் ஆய்வு செய்தனர். பாலத்தில் உள்ள இரும்பு பிளேட்டில் விரிசல் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.ஓரிரு தினத்தில் சென்னையில் இருந்து ஐ.ஐ.டி.., குழுவினர் வந்து ஆய்வு செய்ய உள்ளனர். இதன்பின்னரே பழுதை சரி செய்ய முடியும் என ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.இதனால் திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் வந்த சிறப்பு ரயில் மண்டபம் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்பட்டு மீண்டும் திருச்சிக்கு புறப்பட்டது.ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று இரவு சென்னை, கோவை செல்ல வேண்டிய ரயில்கள், காலி பெட்டியுடன் பாம்பன் பாலத்தை கடந்து வந்து மண்டபம் ஸ்டேஷனில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றன.இந்த துாக்கு பாலத்தில் அடிக்கடி பழுது ஏற்படுவதால் ரூ.250 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டுமான பணி நடப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X