பொது செய்தி

இந்தியா

கேரளாவில் கொரோனா பாதிப்புக்கு ஏற்ப 4 வகையில் ஊரடங்கு அமல் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது

Added : ஜூன் 17, 2021
Share
Advertisement
மூணாறு, கேரளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நேற்றுடன் நிறைவு பெற்றது. இன்று முதல் கொரோனா பாதிப்பு சதவீதத்திற்கு ஏற்ப ஊரடங்கை செயல்படுத்தும் பொறுப்பு உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்படி நான்கு வகையாக ஊரடங்கு அமலாகிறது.பாதிப்பு 8 சதவீதம் வரை உள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகளுடன் அனைத்து கடைகளும்

மூணாறு, கேரளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நேற்றுடன் நிறைவு பெற்றது. இன்று முதல் கொரோனா பாதிப்பு சதவீதத்திற்கு ஏற்ப ஊரடங்கை செயல்படுத்தும் பொறுப்பு உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்படி நான்கு வகையாக ஊரடங்கு அமலாகிறது.பாதிப்பு 8 சதவீதம் வரை உள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகளுடன் அனைத்து கடைகளும் காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை 50 சதவீதம் ஊழியர்களுடன் திறக்கலாம். இதில் 147 உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன.பாதிப்பு 8 முதல் 20 சதவீதம் வரை உள்ள பகுதிகளில் அத்தியாவசிய கடைகள் காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரையும், மீதமுள்ள கடைகள் திங்கள், புதன், வெள்ளி கிழமைகளிலும் திறக்கலாம். 716 உள்ளாட்சி அமைப்புகள் இது பின்பற்றப்பட உள்ளது. பாதிப்பு 20 சதவீதத்திற்கு மேல் உள்ள 146 உள்ளாட்சி அமைப்பு பகுதிகளில் அத்தியாவசிய கடைகள் மட்டும் காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை திறக்கவும், மீதமுள்ள கடைகள் வெள்ளி கிழமை மட்டும் திறக்க அனுமதியுண்டு.பாதிப்பு 30 சதவீதத்திற்கு மேல் உள்ள பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். இது 25 உள்ளாட்சி அமைப்புகளில் அமலாகிறது.மாநிலத்தில் அத்தியாவசிய தேவை, அரசு, சுகாதாரதுறை ஊழியர்களுக்கு என 600 பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், பயணிகள் எண்ணிக்கை அடிப்படையில் இன்று முதல் அதிக பஸ்கள் இயக்கப்படுகிறது. வழிபாட்டு தலங்கள், சுற்றுலா பகுதிகள், சுற்றுலா நிகழ்ச்சிகள், உள்அரங்குகள், சூப்பர் மார்க்கெட் செயல்பட அனுமதியில்லை. திருமணம், இறப்பு நிகழ்ச்சிகளில் 20 பேர் பங்கேற்கலாம். வங்கிகள் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் செயல்படும்.அரசு மதுபான கடை, பார் ஆகியவை இன்று முதல் காலை 9:00 முதல் இரவு 7:00 மணி வரை திறக்கலாம். மதுவுக்கு 'ஆன்லைன்' முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.----------------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X