பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.500 கோடி பாக்கியை வழங்க பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

Added : ஜூன் 17, 2021
Share
Advertisement
ஈரோடு 'ஆவின் நிர்வாகம் 500 கோடி ரூபாய்க்கு மேல் பாக்கி வைத்துள்ளது. இத்தொகையை, உடனே வழங்க வேண்டும்' என, பால் உற்பத்தியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில தலைவர் முனுசாமி, பொதுச் செயலர் முகமது அலி ஆகியோர், முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பிய மனு:தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆரம்ப பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு

ஈரோடு 'ஆவின் நிர்வாகம் 500 கோடி ரூபாய்க்கு மேல் பாக்கி வைத்துள்ளது. இத்தொகையை, உடனே வழங்க வேண்டும்' என, பால் உற்பத்தியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில தலைவர் முனுசாமி, பொதுச் செயலர் முகமது அலி ஆகியோர், முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பிய மனு:தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆரம்ப பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம், 35 லட்சம் முதல், 40 லட்சம் லிட்டர் பால், ஆவினுக்கு வழங்கப்படுகிறது. ஐந்து லட்சம் குடும்பங்கள் இதை நம்பி உள்ளன.தவிர, 10 லட்சம் குடும்பங்கள் தினமும் 1.50 கோடி லிட்டர் பாலை தனியாருக்கு வழங்குகின்றன.ஆவின் நிர்வாகம், பாலுக்கான தொகையில் 500 கோடி ரூபாய்க்கு மேல் பாக்கி வைத்துள்ளது.மேலும், தனியார் பால் கொள்முதல் நிறுவனங்கள், பல இடங்களில் ஒரு லிட்டருக்கு 10 முதல் 15 ரூபாய் வரை கொள்முதல் விலையை குறைத்துள்ளன.பசும்பால் 1 லிட்டர் 32 ரூபாய், எருமைப் பால் 1 லிட்டர் 41 ரூபாய்க்கு குறையாமல், அனைத்து தனியார் நிறுவனங்களும் கொள்முதல் செய்ய, அரசு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X