பொது செய்தி

தமிழ்நாடு

படகை தோளில் சுமந்து மீனவர்கள் நூதன ஆர்ப்பாட்டம்

Added : ஜூன் 17, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
படகை தோளில் சுமந்து மீனவர்கள் நுாதன ஆர்ப்பாட்டம் தஞ்சாவூர் பெட்ரோல், டீசல் விலை உயர்வால், மீனவர்கள் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, மல்லிப்பட்டினம் துறைமுகத்தில், படகை தோளில் சுமந்து, மீனவர்கள் நுாதன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில், தமிழ்நாடு மீனவர் பேரவை மற்றும் தமிழ்நாடு மீனவர் கூட்டமைப்பு
  படகை தோளில் சுமந்து மீனவர்கள் நூதன ஆர்ப்பாட்டம்

படகை தோளில் சுமந்து மீனவர்கள் நுாதன ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் பெட்ரோல், டீசல் விலை உயர்வால், மீனவர்கள் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, மல்லிப்பட்டினம் துறைமுகத்தில், படகை தோளில் சுமந்து, மீனவர்கள் நுாதன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில், தமிழ்நாடு மீனவர் பேரவை மற்றும் தமிழ்நாடு மீனவர் கூட்டமைப்பு சார்பில், தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில பொதுச் செயலாளர் தாஜூதீன், விசைப்படகு மீனவர்கள் சங்க மாவட்டச் செயலாளர் வடுகநாதன் தலைமையில், நேற்று, ஆர்ப்பாட்டம் நடந்தது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும், மீனவர்களுக்கு வரி நீக்கம் செய்து, டீசல் வழங்க வேண்டும், என்பன போன் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், கட்டுமரத்தை தள்ளுவண்டியில் ஏற்றியும், தோளில் சுமந்தும் நுாதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார், ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
17-ஜூன்-202102:46:02 IST Report Abuse
BASKAR TETCHANA தேர்தலுக்கு ஸ்டாலினுக்கு தோள்கொடுத்து தூக்கி விட்டிர்கள். ஆனால் இந்த ஆட்சியில் உங்களுக்கு ஒன்றும் கிடைக்க போவதில்லை. உங்கள் நிலைமையை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது. தேர்தலுக்கு முன்னர் உங்கள் தோளில் ஸ்டாலின் விடியல் ஆட்சி மலரும் என்றார் . இப்போது நீங்கள் படகு ஒன்றை சுமந்து கொண்டு ஒரே இருட்டாக இருக்கிறதே இன்னும் விடியல் வரவில்லை என்று புலம்புகிறீர்கள்.. என்ன செய்வது எல்லாமே உங்கள் தலை எழுத்து.ஸ்டாலின் தான் வாராரு பெட்ரோல் தரமாட்டார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X