பொது செய்தி

தமிழ்நாடு

கர்நாடகா அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Added : ஜூன் 17, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மேட்டூர் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், கர்நாடகா அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது.கர்நாடகா, கேரளா மாநிலங்களில், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், கர்நாடகாவில் காவிரி குறுக்கே கட்டியுள்ள அணைகளின் நீர்வரத்து நேற்று முதல் அதிகரிக்க தொடங்கியது. நேற்று முன்தினம் வினாடிக்கு, 6,000 கன அடியாக இருந்த கபினி

மேட்டூர் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், கர்நாடகா அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது.கர்நாடகா, கேரளா மாநிலங்களில், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், கர்நாடகாவில் காவிரி குறுக்கே கட்டியுள்ள அணைகளின் நீர்வரத்து நேற்று முதல் அதிகரிக்க தொடங்கியது. நேற்று முன்தினம் வினாடிக்கு, 6,000 கன அடியாக இருந்த கபினி நீர்வரத்து, நேற்று, 7,000 கன அடியாகவும், வினாடிக்கு, 1,200 கன அடியாக இருந்த கே.ஆர்.எஸ்., அணை நீர்வரத்து, 6,000 கன அடியாகவும் அதிகரித்தது.அதேபோல், வினாடிக்கு, 1,400 கன அடியாக இருந்த ஹேமாவதி நீர்வரத்து, 3,400 கன அடியாகவும், 900 கன அடியாக இருந்த ஹேரங்கி நீர்வரத்து, 1,500 கன அடியாகவும் அதிகரித்தது. வரும் நாட்களில் அணைகளின் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளின் நீர்மட்டம் அதிகரிக்கும் பட்சத்தில், மேட்டூர் அணைக்கு நீர் திறக்க வாய்ப்புள்ளது. நேற்று, மேட்டூர் அணை நீர்மட்டம், 94.26 அடி, நீர் இருப்பு, 57.65 டி.எம்.சி.,யாக இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
17-ஜூன்-202109:51:09 IST Report Abuse
R.RAMACHANDRAN அபரிமிதமான மழை பொழிந்து அணைகள் நிரம்பி வழிந்தால் தவிர கர்நாடக அரசு தீர்ப்புப்படி தண்ணீர் திறக்காது.அரசை வேண்டுவதை விட்டு இயற்கையை வேண்டுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X