பொது செய்தி

தமிழ்நாடு

அறிவிப்பு வெளியிடும் முன் அமைச்சர் தீர ஆலோசிக்கணும்!

Updated : ஜூன் 17, 2021 | Added : ஜூன் 17, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
அனைவரும் அர்ச்சகராகலாம் மற்றும் பெண்களும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அறிவிப்பை, மீண்டும் தி.மு.க., அரசு கையில் எடுத்து இருக்கிறது. இவ்விஷயத்தைப் பற்றி பல்வேறு தரப்பு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.ஆடிட்டர் ஸ்ரீராம் சேஷாத்ரி கூறியதாவது:இது ஒன்றும் புதிய முயற்சி அல்ல. 1967ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்த நாள் முதல், இரண்டு முறை இதே முயற்சியை மேற்கொண்டு, தோல்வி கண்டுள்ளது. இந்த விபரம்,
அறிவிப்பு, அமைச்சர், ஆலோசிக்கணும்!

அனைவரும் அர்ச்சகராகலாம் மற்றும் பெண்களும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அறிவிப்பை, மீண்டும் தி.மு.க., அரசு கையில் எடுத்து இருக்கிறது. இவ்விஷயத்தைப் பற்றி பல்வேறு தரப்பு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஆடிட்டர் ஸ்ரீராம் சேஷாத்ரி கூறியதாவது:இது ஒன்றும் புதிய முயற்சி அல்ல. 1967ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்த நாள் முதல், இரண்டு முறை இதே முயற்சியை மேற்கொண்டு, தோல்வி கண்டுள்ளது. இந்த விபரம், தற்போதைய தமிழக பா.ஜ.,வினருக்குத் தெரியுமோ தெரியாதோ. தி.மு.க., விரித்த வலையில், இவர்கள் அறியாமலேயே விழுந்து விட்டதாகத் தான் கருத வேண்டியுள்ளது.

விபரத்துக்கு வருவோம். 1969ல் பட்டியலினத்தவர் மீதான தீண்டாமை, பொருளாதார மற்றும் வளர்ச்சிக்கான குழு, ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், 'ஹிந்து சமுதாயத்தில் உள்ள பரம்பரை அர்ச்சகர் முறை ஒழிக்கப்பட வேண்டும்; அவர்களுக்கு பதிலாக ஜாதி, வர்ணம், இனம் ஆகிய பாகுபாடு இன்றி, எவர் வேண்டுமானாலும், முறையான பயிற்சி பெற்றவர்கள் அர்ச்சகர்கள் ஆக்கப்படலாம்' என்று தெரிவித்து இருந்தது.

இந்த அறிக்கையை ஒட்டி, 1971ம் ஆண்டு தமிழ்நாடு ஹிந்து அறநிலையத் துறை சட்டத்தில் பல திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. அதில், பிரிவு 55ல், அனைத்து ஆலயங்களிலும் அர்ச்சகர்களின் வாரிசுரிமை நீக்கப்பட்டது. அது சரியான அணுகுமுறை. ஆனால் ஒரு பிரச்னை. இந்திய அரசியல் சாசன சட்டப் பிரிவுகள் 25 மற்றும் 26 ஆகியவை, ஆகம விதிகளின்படி கோவில் நடைமுறைகளை பாதுகாக்கிறது.

தி.மு.க., அரசு கொண்டு வந்த புதிய திருத்தமோ, அத்தகைய ஆகம கோவில்களிலும், எந்த ஜாதியினரும், வர்ணத்தினரும் அர்ச்சகராகலாம் என்பதை வலியுறுத்தியது.இந்த விஷயம், நீதிமன்றத்துக்கு போனது. உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வின் முன், இவ்வழக்கு நடைபெற்றது. முரண் ஆகிவிடும்அப்போது, இந்தச் சட்ட திருத்தத்தை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, வேறொரு விஷயத்தைத் தெளிவுபடுத்தியது.

அர்ச்சகர்களின் வாரிசு உரிமை நீக்கப்பட்டது நியாயம் தான் என்றாலும், ஆகம விதிகளின் படி, ஒரு குறிப்பிட்ட பிரிவு, குழு, உப குழு ஆகியவற்றில் இருந்து வருபவர்களையே, கோவில் நிர்வாகிகளாகவும், பணியாளர்களாகவும் நியமிக்க வேண்டுமா என்ற கேள்விக்கு பதில் சொன்னது.தீர்ப்பின் அடிநாதம் இது தான். அதாவது, 'அரசின் அனுமதியில், ஆகமங்களால் அங்கீகரிக்கப்படாத ஒருவர், சிலைகளைத் தொடுவதால், தீட்டு ஏற்பட்டாலோ அல்லது துாய்மை கெட்டுப் போனாலோ, அது ஹிந்து பக்தரின் மத நம்பிக்கையையும், வழிமுறைகளையும் கடுமையாக பாதிப்பதாகும்.

'அது, அரசியல் சாசன சட்டப் பிரிவுக்கு முரணானதாக ஆகிவிடும்' என்றது தீர்ப்பு. கடந்த 1971ல் கொண்டு வரப்பட்ட மூல திருத்தம், துணைப் பிரிவு 1ல் குறிப்பிடுவது போல், உருவாகும் காலியிடத்துக்கு, வாரிசுரிமை அடிப்படையில் நியமனம் செய்யப்படுவதற்கு உரிமை இல்லை என்றது.

இதற்கு அடுத்து, 2006 ஜூலை 14ம் தேதி, தமிழக அரசு, இதே சட்டப் பிரிவு 55ல், துணைப் பிரிவு 2ஐ சேர்த்தது. அதில், மேலே உள்ள பிரிவோடு, கூடுதலாக ஒரு வரியையும் சேர்த்தது. அதன்படி, 'எந்த விதமான மரபு அல்லது பயன்பாட்டின் அடிப்படையிலும் நியமனம் செய்யக் கூடாது' என்று சேர்க்கப்பட்டது.

இதே சமயத்தில், இன்னொரு அரசு உத்தரவும் போடப்பட்டது. அதன்படி, 'ஹிந்துவாகவும், வேண்டிய தகுதிகளும், பயிற்சியும் உள்ள யாரும், ஹிந்து கோவில்களில் அர்ச்சகராக நியமிக்கப்படலாம்' என்று, உத்தரவு போடப்பட்டது. ஏற்கனவே கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்தையும், இந்த அரசு உத்தரவையும் எதிர்த்து, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைச் சேர்ந்த, ஆதி சைவ சிவாச்சாரியர்கள் மற்றும் அர்ச்சகர்கள் பேரவையினர் மனு தாக்கல் செய்தனர்.


எதுவும் செய்ய முடியாது



இந்த மனு, உச்ச நீதிமன்ற அமர்வுக்குச் சென்றது. அரசியல் சாசன அமர்வுக்கு போகவில்லை. அங்கே, இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், நீதிபதிகள் ரஞ்சன் கோகோயும், என்.வி.ரமணாவும் வேறொரு முக்கிய விஷயத்தை கூறினர்.அதாவது, 'ஏற்கனவே ஆகமங்களின் அடிப்படையில் தான், அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று வழங்கப்பட்ட தீர்ப்பே செல்லும்' என்று, சொன்னது உச்ச நீதிமன்றம்.

தற்சமயம், ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில், 44 ஆயிரம் கோவில்கள் உள்ளன. இதில் 4,000 கோவில்கள், சைவ அல்லது வைணவ ஆகமங்களின் அடிப்படையில்தான் செயல்படுகின்றன. கிட்டத்தட்ட 40 ஆயிரம் கோவில்களில் பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் அர்ச்சகர்களாக உள்ளனர்; இதில் பெண்களும் அடங்குவர்.

ஆனால், 1971 அரசியல் சாசன அமர்வு உறுதியளித்தபடி, 4,000 கோவில்களில், அந்தந்த கோவில்கள் பின்பற்றும் ஆகம சாஸ்திரப்படி, வழிவழியாக உள்ள பிரிவு, குழு, உப பிரிவைச் சேராதவர்கள் எவரையும் நியமனம் செய்வதில், அரசு தலையிட முடியாது. இவ்வளவு தெளிவாக தீர்ப்புகள் இருக்கும்போது, எதற்கு இந்தப் புதுப் பிரச்னை?


latest tamil news




இதில் அரசியல் சாசன திருத்தம் 25 மற்றும் 26 ஆகியவை மத நம்பிக்கைக்கும், வழக்கங்களுக்கும் வழங்கும் பாதுகாப்பு நீக்கப்படாதவரை, தமிழ்நாடு அரசால் எதுவும் செய்ய முடியாது. இந்த இரண்டு பிரிவுகளும் திருத்தப்பட்டால், அது, ஒரு மதத்தையோ, ஒரு வழிபாட்டினரையோ மட்டும் பாதிக்காது. அனைத்து தரப்பினரையும் பாதிக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

- - நமது நிருபர் --

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sadagopan Varadhachari - Hosur,இந்தியா
22-ஜூன்-202112:18:48 IST Report Abuse
Sadagopan Varadhachari எல்லாம் ஒரு அரசியல் ஸ்டண்ட் .
Rate this:
Cancel
Marcopolo - Chennai,இந்தியா
22-ஜூன்-202106:41:24 IST Report Abuse
Marcopolo நானும் அமைச்சராக வந்துட்டேன் இல்லே எதாவது செய்யணும் இல்லே அதுதான் செய்கிறேன். ஹி ஹி ஹி .
Rate this:
Cancel
karutthu - nainital,இந்தியா
21-ஜூன்-202115:03:54 IST Report Abuse
karutthu அதெலாம் ஒன்றும் இல்லை .....பிராமணர்கள் எழுவருடம் பாடசாலையில் வேத அத்யயனம் / குருக்களுக்கு படித்துவிட்டு ப்ரோஹிதம் மற்றும் குருக்களாக வேலை செய்து வந்தார்கள் இது அவர்களுக்கு பிடிக்கவில்லை ...இதை காரணம் காட்டி பிராமணனை ஒழிக்கணும் என்பது இவர்கள் திட்டம் .....கெடுவான் கேடுநினைப்பான் ...தெய்வம் நல்லவர்களை காப்பாற்றும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X