பொது செய்தி

தமிழ்நாடு

தாமிரபரணி நாகரிகத்தை காட்சிப்படுத்த திட்டம்

Added : ஜூன் 17, 2021
Share
Advertisement
சென்னை:''தாமிரபரணி நாகரிகத்தை காட்சிப்படுத்தும் திட்டம், அரசின் பரிசீலனையில் உள்ளது,'' என, அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில், கலை பண்பாட்டுத் துறை, தொல்லியல் துறை, அருங்காட்சியகங்கள் துறை ஆய்வுக் கூட்டம் நடந்தது.பின், அமைச்சர் அளித்த பேட்டி:கொரோனா ஊரடங்கு காலம் முடிந்ததும்,

சென்னை:''தாமிரபரணி நாகரிகத்தை காட்சிப்படுத்தும் திட்டம், அரசின் பரிசீலனையில் உள்ளது,'' என, அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில், கலை பண்பாட்டுத் துறை, தொல்லியல் துறை, அருங்காட்சியகங்கள் துறை ஆய்வுக் கூட்டம் நடந்தது.பின், அமைச்சர் அளித்த பேட்டி:கொரோனா ஊரடங்கு காலம் முடிந்ததும், முதலீட்டாளர்கள் தொழில் துவங்க முன்வருவர்.

புதிய தொழில் துவங்க, சிலர் விருப்பம் தெரிவித்து, ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிலை உள்ளது. ஊரடங்கு முடிந்ததும் இப்பணிகள் மேற்கொள்ளப்படும்.சிவகங்கை மாவட்டம் கீழடியில், தற்போது ஏழாம் கட்ட ஆய்வுகள் நடந்து வருகின்றன. ஆய்வில் மிக முக்கியமான பொருட்கள் கிடைத்துள்ளன. இவை, தமிழரின் தொன்மை, நாகரிகம் ஆகியவற்றை, 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்துக்கு எடுத்து செல்லும் வகையில் உள்ளன.

அங்கு உலகத்தரம் வாய்ந்த அகழ் வைப்பகம் அமைக்கப்படும்.கீழடி தவிர, ஆதிச்சநல்லுார், கொடுமணல், கொற்கை, கங்கைகொண்ட சோழபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடந்து வருகிறது. திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில், ஆய்வு வழியே, தாமிரபரணி நாகரிகத்தை காட்சிப்படுத்தும் கருத்துரு, அரசின் பரிசீலனையில் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X