பொது செய்தி

தமிழ்நாடு

10ம் வகுப்பு மாணவர்களுக்கு 9ம் வகுப்பு மார்க்

Added : ஜூன் 17, 2021
Share
Advertisement
சென்னை:பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு, ஒன்பதாம் வகுப்புக்கான மதிப்பெண் பட்டியல் தனியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.கொரோனா பரவல் பிரச்னையால், தமிழகத்தில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடத்தப்படவில்லை. பிளஸ் 2வுக்கு மதிப்பெண் வழங்க கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது; 10ம் வகுப்புக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை.பத்தாம் வகுப்பு

சென்னை:பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு, ஒன்பதாம் வகுப்புக்கான மதிப்பெண் பட்டியல் தனியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் பிரச்னையால், தமிழகத்தில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடத்தப்படவில்லை. பிளஸ் 2வுக்கு மதிப்பெண் வழங்க கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது; 10ம் வகுப்புக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, தேர்ச்சி சான்றிதழ் மட்டுமே வழங்கப்படும். ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், பிளஸ் 1 மற்றும் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என, பள்ளி கல்வி மற்றும் உயர்கல்வி துறை அறிவுறுத்தியது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் விபரம் வழங்கப்படவில்லை. எனவே, பல பள்ளிகளில் தனியார் பள்ளி மாணவர்கள், தங்களின் மதிப்பெண் அட்டை வழியே எளிதில் சேர்ந்து விட்டனர்.இதையடுத்து, அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி அளவில் மதிப்பெண் பட்டியல் வழங்க, பள்ளி கல்வித் துறை கமிஷனர் நந்தகுமார் உத்தரவிட்டு உள்ளார்.

அதன் விபரம்:பள்ளிக்கல்வி முடித்து, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., உள்ளிட்ட மேல்படிப்புகளில் சேர, 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் அவசியம். கடந்த கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு, 2019- - 20ம் கல்வி ஆண்டில், ஒன்பதாம் வகுப்பு ஆண்டு இறுதி தேர்வு நடத்தவில்லை. காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டன.

அந்த தேர்வுகளின் மதிப்பெண் அடிப்படையில், மதிப்பெண் பட்டியல் தயாரிக்க வேண்டும்.காலாண்டு, அரையாண்டு என, இரண்டிலும் மாணவர்கள் பங்கேற்காவிட்டாலும், பங்கேற்று தேர்ச்சி பெறாவிட்டாலும், அந்த மாணவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண் 35 ஆக குறிப்பிட்டு வழங்க வேண்டும்.ஏதாவது ஒரு தேர்வில் மட்டும் தேர்ச்சி பெற்றிருந்தால், தேர்ச்சியடைந்த தேர்வின் மதிப்பெண்ணை அந்த பாடத்துக்கு குறிப்பிட வேண்டும். 10ம் வகுப்புக்கான தேர்ச்சி சான்றிதழ், அரசு தேர்வு துறையால் பின்னர் வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஏனோதானோ முடிவால் எதிர்காலம் 'பணால்!'பள்ளிக்கல்வி கமிஷனரின் இந்த சுற்றறிக்கை, பெற்றோருக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒன்பதாம் வகுப்புக்கு தேர்வு நடத்தி, மதிப்பெண் தயாராக இருக்கும் போது, அதை 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் குறிப்பிட்டு வழங்கலாம் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.பிளஸ் 2 மாணவர்களுக்கு கமிட்டி அமைத்து, பிளஸ் 1, 10ம் வகுப்பு மதிப்பெண்ணை கணக்கிடுவது போல, 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் கமிட்டி அமைத்து, கருத்து கேட்கலாம்.

ஆக்கபூர்வ முயற்சி எடுக்காமல், கருத்தொற்றுமை இன்றி, பொதுத்தேர்வு மதிப்பெண் விஷயத்தில், ஏனோதானோவென்ற முடிவை எடுத்திருப்பது, மாணவர்களின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கும்.இந்த பிரச்னை அரசுக்கு தற்போது தீர்ந்தாலும், எதிர்காலத்தில் இந்த மாணவர்கள், அரசு, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வெளிமாநில வேலைவாய்ப்புகளை பெறுவதில், 10ம் வகுப்பு மதிப்பெண் இல்லாமல் பெரும் சிக்கலாகும் என, பெற்றோர் கவலை அடைந்துள்ளனர். வேலைவாய்ப்பு நடவடிக்கையில், 2020 - -21ம் கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு மாணவர்களை புறக்கணிக்கும் அபாயமும் உள்ளதாக அஞ்சப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X