எப்.ஏ.டி.எப்., அமைப்பு ஆய்வு; கருப்பு படியலில் பாக்.,?

Updated : ஜூன் 17, 2021 | Added : ஜூன் 17, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
இஸ்லாமாபாத்-தாங்கள் விதித்த, 27 நிபந்தனைகள் மீது, பாகிஸ்தான் எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி, எப்.ஏ.டி.எப்., எனப்படும், பயங்கரவாதத்துக்கு எதிரான நிதி தடுப்பு அமைப்பு, அடுத்த வாரம் ஆய்வு செய்ய உள்ளது.பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், பாகிஸ்தானை, எப்.ஏ.டி.எப்., கடந்த, 2018ம் ஆண்டு முதல், 'கிரே' பட்டியலில் வைத்துள்ளது. இதனால்,

இஸ்லாமாபாத்-தாங்கள் விதித்த, 27 நிபந்தனைகள் மீது, பாகிஸ்தான் எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி, எப்.ஏ.டி.எப்., எனப்படும், பயங்கரவாதத்துக்கு எதிரான நிதி தடுப்பு அமைப்பு, அடுத்த வாரம் ஆய்வு செய்ய உள்ளது.



latest tamil news



பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், பாகிஸ்தானை, எப்.ஏ.டி.எப்., கடந்த, 2018ம் ஆண்டு முதல், 'கிரே' பட்டியலில் வைத்துள்ளது. இதனால், சர்வதேச நிதியம், உலக வங்கி ஆகியவற்றிடமிருந்து நிதியுதவி பெறுவதில், பாகிஸ்தானுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 'பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதை தடுக்க, பாகிஸ்தான், 27 நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்; இல்லாவிடில், கருப்பு பட்டியலில் பாகிஸ்தான் சேர்க்கப்படும்' என, எப்.எ.டி.எப்., கடந்த ஆண்டு நிபந்தனை விதித்தது.


latest tamil news


இந்நிலையில், 27 நிபந்தனைகள் மீது, பாகிஸ்தான் எடுத்துள்ள நடவடிக்கை பற்றி, ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலைநகர் பாரீசில், வரும், 21ம் தேதி முதல் நடக்க உள்ள எப்.ஏ.டி.எப்., ஆண்டு கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட உள்ளது. பாகிஸ்தான் எடுத்துள்ள நடவடிக்கைகள, திருப்தி அளிக்காவிட்டால், பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்க்க, எப்.ஏ.டி.எப்., முடிவு செய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
17-ஜூன்-202113:23:00 IST Report Abuse
மலரின் மகள் நல்லது நடக்குமா? கருப்பு பட்டியலில் இணையுமா?
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
17-ஜூன்-202109:59:57 IST Report Abuse
M  Ramachandran பாகிஸ்தான் எப்போதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதால் ஜனநாயகம் அன்கு செல்லுபடியாகாது.ராணுவ மேலதிகாரிகள். பெரும் பணக்காரர்களாகவும் மக்கள் மேலும் மேலும் ஏழைகளாக ஆகி கொண்டிருக்கிறார்கள். இது நமக்கு ஒரு நாள் பெரிய பிரச்னையாக போகிறது.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
17-ஜூன்-202109:51:36 IST Report Abuse
M  Ramachandran பாகிஸ்தான் தீவிர வாதி நாடு என்று பட்டியலில் சேர்க்க வேண்டும். தீவிர வாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவமே உதவி செய்யும் போது அது எப்படி தீவிரவாதிகளை அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க முடியும். முத்திரை குத்தினால் தான் நேராக சீனாவிடம் சரணடைந்து அவர்கள் களுக்கு கீழ் படுத்திருக்க வேண்டிய நிலையால் ஆட்சி யாளர்களும் ராணுவமும் செய்கிறது. மக்களுக்கு விளைவுகள் தேறி வதில்லை. தெரிந்தால் எப்போதோ தீவிரவாதிகளை வளர் விடமால் செய்ந்திருப்பார்கல்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X