பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: அரசுக்கு நேர்மை இருந்தால்..

Updated : ஜூன் 17, 2021 | Added : ஜூன் 17, 2021 | கருத்துகள் (74)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:சி.ஆர்.குப்புசாமி, உடுமலைப்பேட்டை, திருப்பூர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்:ஹிந்து விரோத செயலை அரங்கேற்ற, தி.மு.க., அரசு முன்வருவதாக தெரிகிறது.தமிழகத்தில், தேவைப்படும் கோவில்களுக்கு, ஆகம பயிற்சி பெற்ற பெண் அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவர் என, ஹிந்து சமய அறநிலையத் துறை
ithu, ungal, idam, இது, உங்கள், இடம்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:



சி.ஆர்.குப்புசாமி, உடுமலைப்பேட்டை, திருப்பூர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்:

ஹிந்து விரோத செயலை அரங்கேற்ற, தி.மு.க., அரசு முன்வருவதாக தெரிகிறது.தமிழகத்தில், தேவைப்படும் கோவில்களுக்கு, ஆகம பயிற்சி பெற்ற பெண் அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவர் என, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.பெண் உரிமை என்ற அடிப்படையில், அவரின் தனிப்பட்ட கருத்தை வரவேற்கலாம்.

ஆனால், எட்டு கோடி தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்து கடமையாற்ற வேண்டிய, 'அமைச்சர்' எனும் பொறுப்பில் இருந்தபடி, அவர் இவ்வாறு கூறுவது ஏற்புடையது அல்ல.பிராமணர் அல்லாதவர், கோவில் கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்வது குறித்த விவாதம், 50 ஆண்டுகளுக்கு மேலாகவே தமிழக மண்ணில் நடந்து வருகிறது.அறநிலைய துறையின் நோக்கம், கோவில்களின் பாரம்பரியம், கலாசாரம், ஆகம விதிகள் பாழ்பட்டு போகாமல் பாதுகாப்பதும், பராமரிப்பதும் ஆகும்.


latest tamil news


தனிமனித விருப்பு, வெறுப்பு அடிப்படையில், ஏடாகூடமாக செயல்படுவது அல்ல.கோவில் மட்டுமின்றி தர்கா, சர்ச் போன்ற இடங்களிலும், பெண் உரிமை குறித்த நடவடிக்கையை, தி.மு.க., எடுக்க முன்வருமா?அப்படி செய்தால், தி.மு.க.,விற்கு நேர்மை இருக்கிறது என பாராட்டலாம். முதல்வர் ஸ்டாலின், இது குறித்து அறிவிப்பு வெளியிடுவார் என, எதிர்பார்க்கிறோம்.

Advertisement




வாசகர் கருத்து (74)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
POORMAN - ERODE,இந்தியா
17-ஜூன்-202122:08:10 IST Report Abuse
POORMAN ஆனா குமாரு ஒன்று மட்டும் புரியல. ஏதாவது சீர்திருத்த முயற்சிகள் நடக்கும்போது முஸ்லீம்கள் தங்களது மதத்துக்கு விரோதம்ன்னு சொல்லுவாங்க. கிறித்துவர்கள் வாட்டிகனில் அனுமதி வாஙகனும்பாங்க. இவங்க மட்டும்தான் முஸ்லீம் கிறித்துவர்களையும் இழுத்து வச்சு பேசுறாங்க. வேடிக்கை. இதுக்கு பேருதான் திசை திருப்புவதா குமார்
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
17-ஜூன்-202121:44:15 IST Report Abuse
jagan தலைமை (எல்லா அமைச்சர் வரை) குடும்பத்தார் தவிர்த்து மற்றவர்களுக்கு வாய்ப்பு உண்டா? இல்ல தொண்டனுக்கு சிங்கள் டீ மட்டும் தானா? ஒரு கட்டிங் கூட இல்லையா என்று உ.பி க்கள் புலம்புவது கூட காதில் விழ வில்லையா?
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
17-ஜூன்-202121:39:30 IST Report Abuse
jagan காலகாலமாகவே எல்லா கோவில்களுக்கும் பிராமணர் அர்ச்சர்கர் இல்லை. இது எல்லாருக்கும் தெரியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X