அரசியல் செய்தி

தமிழ்நாடு

சட்டசபை கூட்டம் முடிந்ததும் லண்டன் செல்கிறார் ஸ்டாலின்

Updated : ஜூன் 17, 2021 | Added : ஜூன் 17, 2021 | கருத்துகள் (73)
Share
Advertisement
சென்னை : சட்டசபைக் கூட்டத் தொடர் முடிந்ததும், மருத்துவ பரிசோதனைகள் செய்வதற்காக, தனி விமானத்தில் லண்டன் செல்ல ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். பிரதமர் மோடியை இன்று சந்திக்கும்போது, இந்த தகவலை ஸ்டாலின் தெரிவிக்க உள்ளார்.முதல்வர் ஸ்டாலின், ஆண்டு தோறும் லண்டன் சென்று மருத்துவ பரிசோதனைகள் செய்வது வழக்கம். கடந்தாண்டு ஜூனில் லண்டன் செல்ல திட்டமிட்டிருந்தார்.கொரோனா தொற்று
 சட்டசபை கூட்டம் ,லண்டன்,  ஸ்டாலின்

சென்னை : சட்டசபைக் கூட்டத் தொடர் முடிந்ததும், மருத்துவ பரிசோதனைகள் செய்வதற்காக, தனி விமானத்தில் லண்டன் செல்ல ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். பிரதமர் மோடியை இன்று சந்திக்கும்போது, இந்த தகவலை ஸ்டாலின் தெரிவிக்க உள்ளார்.

முதல்வர் ஸ்டாலின், ஆண்டு தோறும் லண்டன் சென்று மருத்துவ பரிசோதனைகள் செய்வது வழக்கம். கடந்தாண்டு ஜூனில் லண்டன் செல்ல திட்டமிட்டிருந்தார்.கொரோனா தொற்று பொது முடக்கத்தால், சர்வதேச விமானங்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது.


latest tamil news


எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில், தனி விமானத்தில் லண்டன் செல்ல மத்திய அரசின் அனுமதி கேட்பார் என எதிர்பார்க்கப்பட்டது; ஆனால், மத்திய அரசை ஸ்டாலின் அணுகவில்லை. இந்த ஆண்டு, மருத்துவ பரிசோதனைகளை செய்வதற்காக லண்டன் செல்ல முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். வரும், 21ம் தேதி சட்டசபை துவங்குகிறது. இந்தக் கூட்டத் தொடர் முடித்ததும், மத்திய அரசின் அனுமதி பெற்று, குடும்பத்தினருடன் தனி விமானத்தில் லண்டன் செல்கிறார்.

டில்லியில், இன்று மாலை பிரதமர் மோடியுடன் சந்திப்பு முடிந்த பின், 10 நிமிடங்கள் தனிப்பட்ட முறையில் அவரிடம் முதல்வர் ஸ்டாலின் பேச வாய்ப்பு உள்ளது. அப்போது, லண்டன் பயனம் குறித்த தகவலை, பிரதமர் மோடியிடம் ஸ்டாலின் தெரிவிப்பார் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
24-ஜூன்-202114:24:24 IST Report Abuse
திரு.திருராம் ரசினியே அனுமதிவாங்கி தனி விமானத்துல மருத்துவத்துக்கு அமெரிக்கா போராரு, நீங்க அவருக்கே முதலாளி, நீங்க போனா என்ன கொறஞ்சிறப்போவுது, தாராளமா போயிட்டுவாங்க, அங்கிட்டும் ரெண்டு மோடி திரிஞசுகிட்டிருக்காங்க சாராய மற்றும் பிளைட் கம்பேனி ஓனரு இருக்காவ, பாத்துட்டு வாங்க,
Rate this:
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
19-ஜூன்-202119:20:28 IST Report Abuse
Poongavoor Raghupathy ஸ்டாலின் உடல்நலம் தமிழ்நாட்டுக்கு மிகவும் முக்கியம். ஸ்டாலின் பதவியை உதயாநிதியிடம் ஒப்படைத்துவிட்டு வெளிநாடு சென்று வைத்தியம் பார்த்து நலமுடன் திரும்பவேண்டும். உதயநிதி கருணாநிதியின் பேரனும் ஸ்டாலினின் மகனும் ஆதலால் ஆட்சியை நலமாக பார்த்துக்கொள்வார் என்பது மக்களுக்கு நன்கு தெரியும், பகுத்து அறிவால் ஸ்டாலின் நலமாக இருக்கவேண்டும்.உதயநிதி தமிழ்நாட்டை இந்தியாவின் முதல் ஸ்டேட் என்ற பெருமையை கொண்டு வருவது நிச்சயம்.
Rate this:
Cancel
Srinivas.... - Chennai,இந்தியா
17-ஜூன்-202117:07:15 IST Report Abuse
Srinivas.... இங்கே விமர்சிக்கும் எல்லா பயலுகளுக்கும் ஒரு பதில்தான்...சூரியனை பார்த்து எத்தனை முறை குரைத்தாலும் சூரியனுக்கு எதுவும் இல்லை.....
Rate this:
N.K - Hamburg,ஜெர்மனி
17-ஜூன்-202121:51:22 IST Report Abuse
N.K ஏழு ஆண்டுகளாக குறைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். பலூன் எல்லாம் விட்டுப்பார்த்தார்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X