பொது செய்தி

இந்தியா

இரட்டிப்பானது நேரடி வரி வசூல்

Added : ஜூன் 17, 2021
Share
Advertisement
புதுடில்லி:கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை காலத்திலும், வருமான வரி, கார்ப்பரேட் வரி போன்ற நேரடி வரி வசூல், முந்தைய ஆண்டைவிட இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.மத்திய நேரடி வரி வாரியம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை தீவிரமாக இருந்தபோதும், நடப்பு 2021 - 2022 நிதியாண்டில், நேரடி வரி வசூல் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.இந்தாண்டு, ஏப்., 1

புதுடில்லி:கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை காலத்திலும், வருமான வரி, கார்ப்பரேட் வரி போன்ற நேரடி வரி வசூல், முந்தைய ஆண்டைவிட இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.மத்திய நேரடி வரி வாரியம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை தீவிரமாக இருந்தபோதும், நடப்பு 2021 - 2022 நிதியாண்டில், நேரடி வரி வசூல் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.இந்தாண்டு, ஏப்., 1 முதல், ஜூன் 15 வரையிலான காலத்தில், மொத்த வரி வருவாயில், 'ரீபண்ட்' எனப்படும் உபரியாக பிடித்த வரி திருப்பி அளித்ததை கழித்த பிறகு, நிகர நேரடி வரியாக, 1.85 லட்சம் கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

முந்தைய ஆண்டில், 92 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்தது.இந்த நிதியாண்டில், நேரடி வரி மூலம், 2.16 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டு, அது 1.37 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இதுவரை, 30 ஆயிரத்து, 731 கோடி ரூபாய் 'ரீபண்ட்' திருப்பி தரப்பட்டுள்ளது. முன்னதாகவே வரி செலுத்துவது போன்ற காரணங்களால் வரி வசூல் அதிகரித்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X