பல்கலை. மாணவர் ஜாமினை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட்டில் மனு

Added : ஜூன் 17, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
புதுடில்லி ;குடியுரிமை திருத்தச் சட்ட போராட்ட வழக்கில் கைதான இரு மாணவியர் மற்றும் ஒரு மாணவருக்கு வழங்கப்பட்ட ஜாமினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் டில்லி போலீஸ் மனு தாக்கல் செய்துள்ளது.கடந்த 2019ல் டில்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இது தொடர்பாக ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவியர் நடாஷா நர்வால் தேவகனா கலிதா
பல்கலை. மாணவர் ஜாமின், ரத்து சுப்ரீம் கோர்ட்டில் மனு

புதுடில்லி ;குடியுரிமை திருத்தச் சட்ட போராட்ட வழக்கில் கைதான இரு மாணவியர் மற்றும் ஒரு மாணவருக்கு வழங்கப்பட்ட ஜாமினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் டில்லி போலீஸ் மனு தாக்கல் செய்துள்ளது.
கடந்த 2019ல் டில்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இது தொடர்பாக ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவியர் நடாஷா நர்வால் தேவகனா கலிதா ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலை மாணவர் ஆசிப் இக்பால் தன்ஹா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு நேற்று முன்தினம் டில்லி உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.


latest tamil news



மூவருக்கும் அரசியல் சாசன சட்டப்படி தங்கள் கருத்துக்களை சொல்ல உரிமை உள்ளதாகவும் ஆட்களை திரட்டி போராடுவது குற்றமல்ல எனவும் நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்திருந்தது.போராடும் உரிமைக்கும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கும் உள்ள வித்தியாசத்தை அரசு புரிந்து கொள்ள தவறி விட்டதாகவும் இந்த எண்ணம் தொடர்ந்தால் அது ஜனநாயகத்திற்கு சோகமான நாள் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் டில்லி போலீசார் நடாஷா கலிதா ஆசிப் இக்பால் ஆகியோருக்கு டில்லி உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமினை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GMM - KA,இந்தியா
17-ஜூன்-202108:36:14 IST Report Abuse
GMM சட்ட போராட்டத்திற்கும் தன் மத ஆதிக்க (பிரிவினை) போராட்டத்திற்கும் வேறுபாடு மிக அதிகம். கருத்து/தீர்வு கூறுபவர்கள் போராட மாட்டார்கள். போராட்ட உரிமை தவறாக பொருள் கொள்ள பட்டு வருகிறது. நீதிமன்றங்கள் தவறான தீர்ப்புக்கு போலி வக்கீல்கள் முக்கிய காரணம் ஆகும். சட்ட ஒழுங்கை நிலை நாட்ட, அரசின் பார்வை போலி வக்கீல்களை நோக்கி திரும்ப வேண்டும்.
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
17-ஜூன்-202108:06:43 IST Report Abuse
VENKATASUBRAMANIAN இதுகளெல்லாம் படிக்கத்தானே போகுது. அதைவிட்டு வேற வேலை ஏன் பார்க்கிறார்கள்
Rate this:
Cancel
ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா
17-ஜூன்-202107:54:59 IST Report Abuse
ஆனந்த் நீதிபதிகளை விமர்சித்தால் அது மட்டும் பெரிய குற்றமா
Rate this:
Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா
17-ஜூன்-202115:19:08 IST Report Abuse
Veeraputhiran Balasubramoniamஓய்வு பெற்ற நீதிபதிகளே நீதிமன்ற தீர்ப்பினை குற்றம் சாட்டியுள்ளனரே??? ஒரு ரூபாய் தண்டனையும் உள்ளதே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X