பொது செய்தி

தமிழ்நாடு

மீனாட்சி கோயில் யானை சிகிச்சைக்குதாய்லாந்து டாக்டர்களிடம் ஆலோசனை

Added : ஜூன் 17, 2021
Share
Advertisement
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானை பார்வதிக்கு 25, கண் லென்ஸ் பாதிப்பு குறித்து தாய்லாந்து டாக்டர்களிடம் ஆலோசிக்க கால்நடை மருத்துவக்கல்லுாரி குழு முடிவு செய்துள்ளது.இக்கோயில் யானை பார்வதிக்கு 6 மாதத்திற்கு முன் கண் லென்ஸ் பாதித்தது. இரவில் கண்கள் வெள்ளை நிறம் போன்று காணப்பட்டதால், மதுரை கால்நடை டாக்டர்கள் ஞானசுதன், முத்துராமலிங்கம் பரிசோதித்தனர். அரவிந்த் கண்
 மீனாட்சி கோயில் யானை சிகிச்சைக்குதாய்லாந்து டாக்டர்களிடம் ஆலோசனை

மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானை பார்வதிக்கு 25, கண் லென்ஸ் பாதிப்பு குறித்து தாய்லாந்து டாக்டர்களிடம் ஆலோசிக்க கால்நடை மருத்துவக்கல்லுாரி குழு முடிவு செய்துள்ளது.

இக்கோயில் யானை பார்வதிக்கு 6 மாதத்திற்கு முன் கண் லென்ஸ் பாதித்தது. இரவில் கண்கள் வெள்ளை நிறம் போன்று காணப்பட்டதால், மதுரை கால்நடை டாக்டர்கள் ஞானசுதன், முத்துராமலிங்கம் பரிசோதித்தனர். அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்களும் பரிசோதித்தனர். ஊரடங்கு காரணமாக வீடியோ கான்பிரன்சிங் மூலம் சென்னை கால்நடை மருத்துவக்கல்லுாரி பேராசிரியர் டாக்டர் ரமணியுடன் ஆலோசிக்கப்பட்டது.

அவர் அறிவுரைபடி, தொடர்ந்து மருந்து கொடுக்கப்பட்டது.நேற்று அவரது தலைமையில் டாக்டர் சிவசங்கர், மதுரை மண்டல உதவிஇயக்குனர் சரவணன் உள்ளிட்டோர் யானை கண்ணை பரிசோதித்து, தற்போது அளிக்கும் சிகிச்சை முறையே தொடருமாறு அறிவுறுத்தினர். தாய்லாந்து நாட்டில் யானைகளுக்கென மருத்துவமனை உள்ளது. அங்கு ஒருமாதம் டாக்டர் சிவசங்கர் பயிற்சி பெற்றுள்ளார். கோயில் நிர்வாகத்திடம் அவர் கூறுகையில், 'பார்வதி யானைக்கு சிகிச்சை அளிக்க தாய்லாந்து டாக்டர்களிடம் ஆலோசித்து ஒருவாரத்தில் அறிக்கை தருகிறோம்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X