பொது செய்தி

தமிழ்நாடு

ஆற்றில் உவர்ப்பு நீர் உள்புகுவதை தடுக்க தடுப்பணை: வீணாகும் 0.5 டி.எம்.சி., தண்ணீரும் சேமிக்க வாய்ப்பு

Added : ஜூன் 17, 2021
Share
Advertisement
பொன்னேரி--பழவேற்காடு ஏரியின் உவர்ப்பு நீர், ஆற்றில் கலப்பதை தடுக்கவும், கடலில் சென்று வீணாகும், 0.5 டி.எம்.சி., மழை நீரை சேமிக்கவும், தடுப்பணை அமைக்கப்பட்டு வருகிறது.பொன்னேரி அடுத்த, லட்சுமிபுரம் கிராமத்தில் உள்ள அணைக்கட்டு மற்றும் ரெட்டிபாளையம் தடுப்பணை ஆகியவற்றில் தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது.ரெட்டிபாளையம் அணைக்கட்டில் இருந்து வெளியேறும் உபரி நீர், 8 கி.மீ.,
 ஆற்றில் உவர்ப்பு நீர் உள்புகுவதை தடுக்க தடுப்பணை: வீணாகும் 0.5 டி.எம்.சி., தண்ணீரும் சேமிக்க வாய்ப்பு

பொன்னேரி--பழவேற்காடு ஏரியின் உவர்ப்பு நீர், ஆற்றில் கலப்பதை தடுக்கவும், கடலில் சென்று வீணாகும், 0.5 டி.எம்.சி., மழை நீரை சேமிக்கவும், தடுப்பணை அமைக்கப்பட்டு வருகிறது.பொன்னேரி அடுத்த, லட்சுமிபுரம் கிராமத்தில் உள்ள அணைக்கட்டு மற்றும் ரெட்டிபாளையம் தடுப்பணை ஆகியவற்றில் தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது.ரெட்டிபாளையம் அணைக்கட்டில் இருந்து வெளியேறும் உபரி நீர், 8 கி.மீ., பயணித்து, பழவேற்காடு உவர்ப்பு நீர் ஏரிக்கு சென்று வீணாகிறது.மேலும், பழவேற்காடு ஏரிக்கு முகத்துவாரம் வழியாக கடல் நீர் வரத்து அதிகரிக்கும்போது, ஆரணி ஆற்றில் தேங்கியிருக்கும் நன்னீருடன் அவை கலந்து விடுகிறது.இதனால், ஆற்று நீரை பயன்படுத்தி விவசாயம் செய்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.பழவேற்காடு ஏரியில் கலந்து வீணாகும் மழை நீரை ஆற்றில் முழுமையாக தேக்கி வைக்கவும், ஏரியின் உவர்ப்பு நீர் ஆற்றின் வழியாக உள்புகுவதை தடுக்கவும் திட்டமிடப்பட்டது.இதற்காக, பொன்னேரி அடுத்த, ஆண்டார்மடம் கிராமத்தில், ஆரணி ஆறு இரண்டாக பிரியும் இடத்தில், 13 கோடி ரூபாயில் தடுப்பணை அமைக்கும் பணிகள், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கப்பட்டது.ஆற்றின் குறுக்கில், 130 மீ., நீளம், 2 மீ., அகலம், 0.75 மீ., உயரம் கொண்ட கான்கிரீட் சுவரும், அதன் மீது, 10 மீ., அகலம், 1.25 மீட்டர் உயரம் உடைய, திறந்து மூடும் வகையிலான, 11 இரும்பு ஷட்டர்களும் அமைகிறது. தடுப்பணையின் இருபுறமும், 2 கி.மீ., நீளத்திற்கு கரைகள் பலப்படுத்தும் பணிகளும் நடைபெறுகிறது.தற்போது, புதிய தடுப்பணைக்கு கான்கிரீட் சுவர் அமைக்கும் பணிகள் முடிந்து, இரும்பு ஷட்டர்கள் பொருத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.அதற்கான தளவாடங்கள் கொண்டு வரப்பட்டு பொருத்தப்பட உள்ளன. அடுத்துவரும் மழைக்காலத்திற்கு முன், பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.இது குறித்து பொதுப்பணி துறை உதவி பொறியாளர் கண்ணன் கூறியதாவது:தடுப்பணை அமைவதன் மூலம், உவர்ப்பு நீர் உள்புகுவது முற்றிலும் தடுக்கப்படும். சுற்றியுள்ள எட்டு கிராமங்களில் நிலத்தடி நீரின் உவர்ப்பு தன்மை மாறும். புதிய தடுப்பணையில் இருந்து, ஏற்கனவே உள்ள ரெட்டிபாளையம் தடுப்பணை வரை ஆற்றில், 0.5 டி.எம்.சி., வரை தண்ணீர் தேங்கும் வாய்ப்பு உள்ளதால், விவசாயத்திற்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X