லாஸ்பேட்டையில் தொகுதியில் 25 லட்சம் செலவில் குடிநீர் குழாய் இணைப்பு பணி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

லாஸ்பேட்டையில் தொகுதியில் 25 லட்சம் செலவில் குடிநீர் குழாய் இணைப்பு பணி

Added : ஜூன் 17, 2021
Share
புதுச்சேரி-லாஸ்பேட்டையில் 25 லட்சம் ரூபாய் செலவில் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு பணி துவக்கப் பட்டுள்ளது.லாஸ்பேட்டை தொகுதிக்குட்பட்ட சாந்தி நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் வினியோகத்தை மேம்படுத்த புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் மூலம் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட உள்ளது.இதற்கான பணியை
 லாஸ்பேட்டையில் தொகுதியில்  25 லட்சம் செலவில் குடிநீர் குழாய் இணைப்பு பணி

புதுச்சேரி-லாஸ்பேட்டையில் 25 லட்சம் ரூபாய் செலவில் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு பணி துவக்கப் பட்டுள்ளது.லாஸ்பேட்டை தொகுதிக்குட்பட்ட சாந்தி நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் வினியோகத்தை மேம்படுத்த புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் மூலம் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட உள்ளது.இதற்கான பணியை வைத்தியநாதன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்டம் தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.இத்திட்டத்தால் மகாவீர் நகர், பெத்துசெட்டிபேட்டை, செல்லப்பெருமாள்பேட்டை, ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பயன் அடைய உள் ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X