பொது செய்தி

இந்தியா

தேசிய திறனாய்வு தேர்வில் 22 மாணவர்கள் தேர்வு

Added : ஜூன் 17, 2021
Share
Advertisement
புதுச்சேரி-பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு முதல் நிலை தேர்வில், புதுச்சேரியில் 22 மாணவர்கள் தேர்வாகி உள்ளனர்.பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் மைக்கேல் பென்னோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, 2020-21ம் ஆண்டிற்கான தேசிய திறனாய்வு முதல் நிலை தேர்வு, மாநில அளவில் கடந்த

புதுச்சேரி-பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு முதல் நிலை தேர்வில், புதுச்சேரியில் 22 மாணவர்கள் தேர்வாகி உள்ளனர்.பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் மைக்கேல் பென்னோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, 2020-21ம் ஆண்டிற்கான தேசிய திறனாய்வு முதல் நிலை தேர்வு, மாநில அளவில் கடந்த ஆண்டு, டிசம்பர் 13ம் தேதி நடத்தப்பட்டது.இந்த தேர்வில், புதுச்சேரியின் 4 பிராந்தியங்களிலும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 3863 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் தேர்ச்சி பெற்று, 2ம் நிலை தேர்வில் கலந்து கொள்ள 22 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.தேசிய அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, முனைவர் பட்டம் படிப்பு வரை உதவித்தொகையை தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வழங்கும். முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும், 2ம் நிலை தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கும் முறையே ரூ. 5000 மற்றும் ரூ. 10 ஆயிரம் ஊக்கத் தொகையை புதுச்சேரி அரசு வழங்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X