பாலூட்டும் பெண்களுக்கு 3வது நாளே தடுப்பூசி போடலாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாலூட்டும் பெண்களுக்கு 3வது நாளே தடுப்பூசி போடலாம்

Updated : ஜூன் 17, 2021 | Added : ஜூன் 17, 2021
Share
சென்னை--தமிழகத்தில், பாலுாட்டும் பெண்களுக்கு தடுப்பூசி போடும் பணி துவங்கப்பட்டுள்ளது. குழந்தை பிறந்த மூன்றாவது நாளில் இருந்து தடுப்பூசி போடப்படுகிறது.கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.எனவே, குழந்தைகள் மற்றும் 18 வயதுக்கு குறைவானவர்களுக்கும், கர்ப்பிணிகள் மற்றும் பாலுாட்டும் பெண்களுக்கும் தடுப்பூசி போடுவது குறித்து

சென்னை--தமிழகத்தில், பாலுாட்டும் பெண்களுக்கு தடுப்பூசி போடும் பணி துவங்கப்பட்டுள்ளது. குழந்தை பிறந்த மூன்றாவது நாளில் இருந்து தடுப்பூசி போடப்படுகிறது.கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.



latest tamil news


எனவே, குழந்தைகள் மற்றும் 18 வயதுக்கு குறைவானவர்களுக்கும், கர்ப்பிணிகள் மற்றும் பாலுாட்டும் பெண்களுக்கும் தடுப்பூசி போடுவது குறித்து ஆராய்ச்சிகள் நடந்தன.பாலுாட்டும் பெண்களுக்கு தடுப்பூசி போட அனுமதி கிடைத்ததை தொடர்ந்து, தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி துவங்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில், இரண்டு நாட்களில் 12 பாலுாட்டும் பெண்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதேபோல், மற்ற மருத்துவமனைகளிலும் பாலுாட்டும் பெண்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது.இது குறித்து, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை இயக்குனர் விஜயா கூறியதாவது:குழந்தை பிறந்து மூன்று அல்லது நான்கு நாட்களில் தடுப்பூசி போடப்படுகிறது. இதுவரை 12 பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளோம். யாருக்கும் பக்க விளைவுகள் ஏற்படவில்லை.உடல் வெப்பம், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு போன்றவைகள் பரிசோதனை செய்த பின், தடுப்பூசி போடப்படுகிறது.


latest tamil news


ஆனால், பயத்தால் பலர் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வருவதில்லை. அவர்களுக்கு ஆலோசனை வழங்கி, தடுப்பூசி போடப்படுகிறது. கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி அனுமதி கிடைத்தால், அவர்களுக்கும் போடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X