பயங்கரவாதத்தால் அமைதி சீர் கெடுகிறது: ராஜ்நாத் சிங்

Updated : ஜூன் 17, 2021 | Added : ஜூன் 17, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி-''பயங்கரவாதத்தால் உலக அமைதி சீர்கெடுகிறது,'' என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.'ஆசியான்' எனப்படும், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் ராணுவ அமைச்சர்கள் மாநாடு, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக நேற்று நடந்தது.இதில், ராஜ்நாத் சிங் பேசியதாவது:ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளின் எல்லைகளை மதித்து நடக்க வேண்டும். தங்களுடைய பிரச்னைகளை, சர்வதேச சட்டங்களுக்கு

புதுடில்லி-''பயங்கரவாதத்தால் உலக அமைதி சீர்கெடுகிறது,'' என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.'ஆசியான்' எனப்படும், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் ராணுவ அமைச்சர்கள் மாநாடு, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக நேற்று நடந்தது.



latest tamil news


இதில், ராஜ்நாத் சிங் பேசியதாவது:ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளின் எல்லைகளை மதித்து நடக்க வேண்டும். தங்களுடைய பிரச்னைகளை, சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு, பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். உலகின் அமைதி, பயங்கரவாதத்தால் சீர்கெடுகிறது. அதைவிட பெரிய சவாலாக, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அமைப்புகளும், நாடுகளும் உள்ளன.பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள், நிதியுதவி செய்பவர்கள், பாதுகாப்பு அளிப்பவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயங்கரவாதத்துக்கு எதிராகவும், அதை ஆதரிப்போருக்கு எதிராகவும், உலக நாடுகள் ஓரணியில் திரள வேண்டும். அப்போது தான் பயங்கரவாதத்தை வேரறுக்க முடியும்.கொரோனா பரவல், உலக நாடுகளின் பொருளாதாரத்தை பாதித்துள்ளது. தொற்றின் இரண்டாவது அலை தாக்கத்திலிருந்து இந்தியா இப்போது தான் மீண்டு வருகிறது.இந்த நெருக்கடியான நேரத்தில், இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டிய நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.எனினும், உலகளவில் தொற்று பயம் தொடர்கிறது. மனிதர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டால் மட்டுமே தொற்று பயம் நீங்கும். இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news


ஆசியான் அமைப்பில், தென்கிழக்கு ஆசிய நாடுகளான புருனே, கம்போடியா, இந்தோனேஷியா, லாவோஸ், மலேஷியா, மியான்மர், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ் ஆகியவற்றுடன், இந்தியா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, தென்கொரியா, ரஷ்யா, அமெரிக்கா, நியூசிலாந்து ஆகியவை நட்பு நாடுகளாக இடம் பெற்றுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-ஜூன்-202114:05:23 IST Report Abuse
Pugazh V அட...இதுவரை யாருக்கும் தெரியாத மாபெரும் உண்மை யை கண்டு பிடித்துவிட்டார். "வேட்டிய மடிச்சு கட்னா ரவுடி", ", ஒங்களுக்கு நல்லது நடக்கும், ஜாக்கிரதை" என்று பயங்கரவாதம் பேசும் எச் ராஜா அணாமலை மாதிரி ஆட்களை உங்களால் ஏதாவது செய்ய முடிந்தால் தமிழக த்தில் அமைதி சீர் கெடாது.
Rate this:
Cancel
C. Vijayadhas - Chennai,இந்தியா
17-ஜூன்-202111:18:30 IST Report Abuse
C. Vijayadhas உங்களால நாடே கெட்டு போகுது.. அது என்னமோ அயோத்தி ல இடம் வாங்குனதுலயே ஊழல் பண்ணி இருக்கீங்க னு சொன்னாங்க?? மதம் பெயரை சொல்லி நல்ல வச்சு செய்ரிங்க..
Rate this:
Cancel
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
17-ஜூன்-202111:00:49 IST Report Abuse
Raj பயங்கரவாதத்தால் அமைதி சீர் கெடுகிறது என்று தெரிகிறதல்லவா, தங்களின் பயங்கரவாதத்தை நிறுத்தி கொள்ளவேண்டியது தானே ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X