அரசியல் செய்தி

தமிழ்நாடு

தெருவெங்கும் மய்யம் கொடி: ஆனாலும் கமலுக்கு பேராசை

Updated : ஜூன் 17, 2021 | Added : ஜூன் 17, 2021 | கருத்துகள் (42)
Share
Advertisement
'வீதியெங்கும் மய்யம் கொடி பட்டொளி வீசி பறக்க வேண்டும்' என, கமல் கட்சியினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தமிழக சட்டசபை தேர்தலில் படுதோல்வியை சந்தித்த, மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும், தோல்விக்கு, கமல் மீது குற்றம் சாட்டி, பதவியை ராஜினாமா செய்ததோடு, கட்சியை விட்டும் விலகினர். இந்நிலையில், கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டும் என்பதை
Kamal, Kamal Haasan, MNM, கமல், கமல்ஹாசன், மய்யம்

'வீதியெங்கும் மய்யம் கொடி பட்டொளி வீசி பறக்க வேண்டும்' என, கமல் கட்சியினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் படுதோல்வியை சந்தித்த, மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும், தோல்விக்கு, கமல் மீது குற்றம் சாட்டி, பதவியை ராஜினாமா செய்ததோடு, கட்சியை விட்டும் விலகினர். இந்நிலையில், கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டும் என்பதை உணர்ந்த கமல், ரசிகர் மன்றப் பணிகளில், தீவிரமாக பணியாற்றி வந்தவர்களுக்கு, முன்னுரிமை தரத் தொடங்கியுள்ளார்.

ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக மாற்றிய போது, முக்கியப் பங்கு வகித்த நாகராஜன், அகில இந்திய கமல் ரசிகர் நற்பணி மன்றத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். இவர், நேற்று கமலை சந்தித்து பேசியுள்ளார்.


latest tamil news



இந்நிலையில், கட்சியின் பொதுச் செயலர் மவுரியா, தொண்டர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தேர்தல் நடத்தை விதி காரணமாக கழற்றி விடப்பட்ட கட்சி கொடிகளை, இனி வீதியெங்கும் பட்டொளி வீசி பறக்க வைக்க வேண்டும். கொடி கம்பம் இல்லையென்றால், அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த, கமல் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளார். விரைவில், பல புதிய அறிவிப்புகள் வெளியாக உள்ளன.
கட்சி உறுப்பினர்கள் சிலர், 'வாட்ஸ் ஆப்' முகநுால் குழு உரையாடல்களில், தேவையற்ற விஷயங்களை பேசுவதும், அது வெளியே பகிரப்படுவதுமாக உள்ளது. நம் ஆற்றல், தேவையற்ற விஷயங்களில் விரயமாக கூடாது. எப்போது என்ன பேசினாலும், எழுதினாலும் கட்சியின் கண்ணியம், கட்டுக்கோப்பு கலையாமல் பார்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தேவையற்ற விஷயமாக இப்போது கட்சிக்கொடி, வீதியெங்கும் பறக்கப் போகிறது; சிங்கார தமிழகம் அசிங்கமாகப் போகிறது; கம்பம் யார் தலையிலாவது விழுந்து விபத்து ஏற்பட்டால், என்ன செய்வது என்பதற்கு, மவுரியாவின் அறிக்கையில் விளக்கம் இல்லை.

-நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
17-ஜூன்-202121:33:23 IST Report Abuse
bal ஏற்கனவே அச்சாரம் திமுகவிடமிருந்து வாங்கியாச்சு இல்ல..சும்மா இருக்க வேண்டியதுதானே. இதே நார வாய் கொடியேற்றம் தெருவெங்கும் பண்ணும் கழகங்களை விமர்சித்தது...
Rate this:
Cancel
SUBBU - MADURAI,இந்தியா
17-ஜூன்-202121:14:20 IST Report Abuse
SUBBU கண்ணுக்கு எட்டிய தூரம் மையத்து ஆட்கள் யாரையும் காணோம். கமலே கொடி கட்டினால்தான் உண்டு.
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
17-ஜூன்-202118:30:05 IST Report Abuse
வெகுளி ரொம்ப ஈசி கமல்ஜி.... நாமெல்லாம் தேசியவாதிகள் என்பதால் இனி தேசிய கொடிதான் மய்ய கொடின்னு அறிவிச்சுடுங்க.... அப்பறம் பாருங்க.... வீதியெங்கும் மட்டுமல்ல, நாடெங்கும் நம்ம கொடிய பட்டொளி வீசி பறக்க வைக்கலாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X