அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலின் டில்லி சென்றார்

Updated : ஜூன் 17, 2021 | Added : ஜூன் 17, 2021 | கருத்துகள் (85)
Share
Advertisement
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். காலை 10:25 மணியளவில் டில்லி சென்ற அவருக்கு தமிழக எம்பி.,க்கள் வரவேற்பு அளித்தனர். தமிழக முதல்வராக பதவியேற்ற பின் முதன்முறையாக இன்று காலை ஸ்டாலின் டில்லி புறப்பட்டு சென்றார். சிறப்பு விமானம் மூலமாக டில்லி சென்ற அவர் டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்குகிறார். டில்லியில் கட்டப்பட்டு
பிரதமர் மோடி, ஸ்டாலின், சந்திப்பு, டில்லி, பயணம்

சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். காலை 10:25 மணியளவில் டில்லி சென்ற அவருக்கு தமிழக எம்பி.,க்கள் வரவேற்பு அளித்தனர்.

தமிழக முதல்வராக பதவியேற்ற பின் முதன்முறையாக இன்று காலை ஸ்டாலின் டில்லி புறப்பட்டு சென்றார். சிறப்பு விமானம் மூலமாக டில்லி சென்ற அவர் டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்குகிறார். டில்லியில் கட்டப்பட்டு வரும் தி.மு.க., கட்சி அலுவலகத்தையும் அவர் பார்வையிடுகிறார்.

இன்று மாலை 5 மணியளவில் பிரதமர் மோடியை ஸ்டாலின் சந்தித்து பேச உள்ளார். மோடியிடம் தமிழகத்திற்கு கூடுதல் கோவிட் தடுப்பூசி தேவை , நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும், செங்கல்பட்டில் கோவிட் தடுப்பூசி உற்பத்திக்கு அனுமதி போன்ற கோரிக்கைகளை முன் வைப்பார் என்று நம்பப்படுகிறது. பிரதமர் சந்திப்பிற்கு பிறகு பத்திரிக்கையாளர்களை ஸ்டாலின் சந்திப்பார்.


latest tamil news


அதன்பின் நாளை வெள்ளிக்கிழமை காங்., தலைவர் சோனியா மற்றும் ராகுலை முதல்வர் ஸ்டாலின் சந்திக்க உள்ளார். டில்லி புறப்பட்டுச் சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஏற்கனவே டெல்லியில் உள்ளார். டில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயனும் அங்கு இருக்கிறார். தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, உள்துறை செயலாளர், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனர் உள்ளிட்ட சில அதிகாரிகள் டில்லி சென்றுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (85)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
20-ஜூன்-202105:24:14 IST Report Abuse
meenakshisundaram இது மாத்திரம் 'டெல்லிக்கு காவடி 'இல்லியா ?
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
17-ஜூன்-202119:51:31 IST Report Abuse
g.s,rajan Go back Modi போய் இப்போ Going towards Modi , ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
17-ஜூன்-202118:50:30 IST Report Abuse
g.s,rajan மேம் சாப் .தோடா கிருபையா கரோ குச் பி நஹி .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X