பொது செய்தி

இந்தியா

பேஸ்புக்கிடம் ரூ.22 லட்சம் பரிசு பெற்ற இந்திய மாணவன்!

Updated : ஜூன் 17, 2021 | Added : ஜூன் 17, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: பேஸ்புக்கிற்கு சொந்தமான இன்ஸ்டாகிராமில் தீங்கு விளைவிக்க கூடிய பிழை இருப்பதை கண்டறிந்து சொன்னதற்காக இந்தியாவைச் சேர்ந்த பொறியியல் மாணவர் ரூ.22 லட்சம் பரிசு வென்றுள்ளார்.மஹாராஷ்டிர மாநிலம் சோலாபூரைச் சேர்நதவர் கணிப்பொறியியல் மாணவர் மயூர். இவர் கணினி மொழிகளான சி++ மற்றும் பைதானில் திறன் பெற்றுள்ளார். இந்நிலையில் பேஸ்புக் தங்கள் தளங்களில்

புதுடில்லி: பேஸ்புக்கிற்கு சொந்தமான இன்ஸ்டாகிராமில் தீங்கு விளைவிக்க கூடிய பிழை இருப்பதை கண்டறிந்து சொன்னதற்காக இந்தியாவைச் சேர்ந்த பொறியியல் மாணவர் ரூ.22 லட்சம் பரிசு வென்றுள்ளார்.



latest tamil news


மஹாராஷ்டிர மாநிலம் சோலாபூரைச் சேர்நதவர் கணிப்பொறியியல் மாணவர் மயூர். இவர் கணினி மொழிகளான சி++ மற்றும் பைதானில் திறன் பெற்றுள்ளார். இந்நிலையில் பேஸ்புக் தங்கள் தளங்களில் இருக்கும் பிழைகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசுத்தொகை அறிவித்திருந்தது. அதில் பங்கேற்ற மயூர், இன்ஸ்டாகிராமில் பிரைவட் கணக்கு வைத்திருந்தாலும் கூட, அதிலுள்ள ஒரு பிழை, எவரை வேண்டுமானாலும் தவறாக நுழைய அனுமதித்து பயனர்களின் புகைப்படங்கள், ஸ்டோரீஸ், ரீல்ஸ் ஆகியவற்றை பார்க்க வைக்கிறது என கண்டுபிடித்தார்.


latest tamil news


இதனை ஏப்., 16 அன்று பேஸ்புக் அறிவித்த போட்டியில் பங்கேற்று தெரிவித்தார். அடுத்த சில நாட்களில் மயூருக்கு பதிலளித்த பேஸ்புக் நிறுவனம் அது பற்றிய கூடுதல் தகவல்களைக் கோரியது. அவர் அது தொடர்பான தொழில்நுட்ப ரீதியான தகவல்களை சேர்த்து அனுப்பினர். அந்த பிழையை ஜூன் 15 அன்று பேஸ்புக் சரிசெய்தது. அதனை கண்டுபிடித்த இந்திய மாணவர் மயூருக்கு 30 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ.22 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்தது. எதிர்காலத்திலும் இது போன்று நிறைய அறிக்கைகளை தங்களிடம் எதிர்பார்க்கிறோம் என மயூரிடம் பேஸ்புக் கூறியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
17-ஜூன்-202118:38:07 IST Report Abuse
கொக்கி குமாரு 22 லட்சம் பரிசு பெற்ற மாணவரே, பரிசு பணத்தை பத்திரமாக வைத்துக்கொள்ளவும். டெல்லியில் இருக்கும் திருட்டு திமுகவினருக்கு தெரிந்தால் ஆட்டையை போட்டுவிடுவார்கள்.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
17-ஜூன்-202115:28:40 IST Report Abuse
தமிழவேல் பாராட்டுக்கள்.
Rate this:
Cancel
17-ஜூன்-202114:50:19 IST Report Abuse
சந்திரசேகர் என் நண்பன் பேஸ்புக் மெசேஞ்சரை ஹேக் பண்ணி அவர் மேசேஞ் பண்ணிகிற மாதிரி எனக்கு மேசேஞ் அனுப்பி என்னுடைய பேங்க் கார்டு நம்பர் இதர ஆவணங்கள் வாங்கி 60000 திருடி விட்டார்கள். இந்த கணினி உலகத்தில் எதுவும் பாதுகாப்பு இல்லை. நாம் எவ்வளவு விழிப்பாக இருந்தாலும் சில சமயங்களில் ஏமாந்து விடுவோம். அறிவை மூலதனமாக்கி கணினி திருடர்கள் ஏழை மக்களின் பணத்தை திருடுகிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X