அப்படியே அந்தப் பெண்கள் அடமானம் வைத்துள்ள நகைகளையும் மீட்க வேண்டும் என்று கேளுங்கள்...

Updated : ஜூன் 17, 2021 | Added : ஜூன் 17, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
ஊரடங்கால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக் குழுவினர், தேசிய மற்றும் தனியார் வங்கிகளில் பெற்றுள்ள கடன் தொகைகளை தமிழக அரசே ஏற்க வேண்டும்.- நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்'அப்படியே அந்த பெண்கள், வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்துள்ளதையும் மீட்டு தர வேண்டும் என்றும் கேளுங்கள். இது குறித்து ஏற்கனவே, தி.மு.க., தேர்தல்
சீமான்,  சந்தோஷ், வீரமணி, எஸ்.ஆர்.சேகர், ரவிகுமார்,

ஊரடங்கால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக் குழுவினர், தேசிய மற்றும் தனியார் வங்கிகளில் பெற்றுள்ள கடன் தொகைகளை தமிழக அரசே ஏற்க வேண்டும்.
- நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்


'அப்படியே அந்த பெண்கள், வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்துள்ளதையும் மீட்டு தர வேண்டும் என்றும் கேளுங்கள். இது குறித்து ஏற்கனவே, தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளது...' என, சொல்லத் தோன்றும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை.கடந்த ஏப்ரல் 12ல் இருந்து இது வரை, நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாள் சாதனையாக, 38.07 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்னும் அதிக மக்களை தடுப்பூசி மையங்களுக்கு அழைத்து வருவது நம் பணி.
- பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச் செயலர் சந்தோஷ்


'அப்படியே, உலக சாதனையாக, கொரோனாவுக்கு மருந்தை கண்டுபிடிங்க ஜி...' என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச் செயலர் சந்தோஷ் அறிக்கை.புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு பகுதியில், ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்கு ஏலம் விடும் மத்திய அரசின், ஓ.என்.ஜி.சி., அறிக்கையை எதிர்த்து, டெல்டா காவிரிப் படுகை விவசாயிகள் மீண்டும் தம் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். தமிழக அரசும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. அந்த திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.
- திராவிடர் கழகத் தலைவர் வீரமணி


latest tamil news
'முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி விட்டார். அதனால், அந்த திட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற்று விடும். அதுவரை நாம் சும்மா இருக்கலாமே...' என, கூறத் தோன்றும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கை.கடவுள் இல்லை; கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை. ஆனால், பூசாரி நியமனம் மட்டும் நான் சொன்னபடி செய் என்பது என்ன நியாயம்?
- பா.ஜ., மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்


'கடவுளை இல்லாமல் ஆக்குவதற்கான முதல் முயற்சியாகத் தான், பூசாரி நியமனத்தை அக்கட்சி கையில் எடுத்துள்ளதோ...' என, கேட்கத் தோன்றும் வகையில், பா.ஜ., மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை.உயர்கல்வித்துறை ஆசிரியர் பணியிடங்களிலும், ஆசிரியர் அல்லாத பணியிடங்களிலும், ஆதிதிராவிட மக்களுக்கு கிடைக்க வேண்டிய, பின்னடைவு காலி பணியிடங்களின் எண்ணிக்கையைக் கண்டறிந்து, அரசு அதை அறிவிப்பதோடு, அவற்றை நிரப்ப சிறப்புப் பணி நியமன நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி., ரவிகுமார்


'உங்கள் கட்சியின் கோரிக்கையை நிறைவேற்ற, ஒரு, ஐ.ஏ.எஸ்., அதிகாரியை முதல்வர் நியமித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை...' என, சொல்லத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி., ரவிகுமார் அறிக்கை.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
17-ஜூன்-202119:03:53 IST Report Abuse
sankaranarayanan எல்லா மனிதர்களும் சம உரிமையும் மதிப்பும் உடையவர்கள் என்ற கோட்பாட்டிற்கு இணங்க பிராமணர் சமுதாயத்தினர் உட்பட அனைத்து சமுதாயத்தினரும் சாதிவாரி இட ஒதுக்கீடு இல்லாமல் தகுதியின் அடிப்படையில் கோயில்களில் மட்டும் இதை பயன்படுத்துவார்கள், அர்ச்சகரா விரும்பும் தீய முகவினர், ஏன் சாதிவாரி இட ஒதுக்கீடு இல்லாமல் தகுதியின் அடிப்படையில் கல்வி - வேலைவாய்ப்பு - மற்றும் எல்லாவித இடங்களுக்கும் அதை, இட ஒதிக்கீடே இல்லாமல் அமல்படுத்தலாமே. அதைமட்டும் செய்யாமல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் ஒரு சமுதாயத்தினரை பழி வாங்குவது முறையா? அப்பொதுமட்டும் பார்வார்டு = பேக்வார்டு = ஷெட்டியூல்டு - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்று எல்லாவிதமான பிரிவுகளையும் உண்டாக்கி, குழப்பத்தில் வைத்து நாடே நரகமாக போயிக்கொண்டிருக்கிறதே. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வராதா? கிடையாதா?
Rate this:
Cancel
karutthu - nainital,இந்தியா
17-ஜூன்-202118:37:14 IST Report Abuse
karutthu படிப்பு , வேலைவாய்ப்பு, பூசாரி எல்லாம் பிராமணர்கள் தவிர மற்ற அனைவருக்கும் தரவேண்டும் என சிம்பிளாக ஒரு கோரிக்கை வைத்தால் அவர்கள் எண்ணம் நிறைவேறிவிடும் .....
Rate this:
Cancel
mohanamurugan - panruti,இந்தியா
17-ஜூன்-202115:50:16 IST Report Abuse
mohanamurugan எல்லா மனிதர்களும் சம உரிமையும் மதிப்பும் உடையவர்கள் என்ற கோட்பாட்டிற்கு இணங்க பிராமணர் சமுதாயத்தினர் உட்பட அனைத்து சமுதாயத்தினரும் சாதிவாரி இட ஒதுக்கீடு இல்லாமல் தகுதியின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் திருவல்லிக்கேணி பழனி திருச்செந்தூர் சிதம்பரம் போன்ற ஊர்களில் உள்ள புகழ்பெற்ற திருக்கோயில்களில் பூசாரியாக பூசை செய்தால் இறைவன் இல்லாமல் போய் விடுவாரா?
Rate this:
திலீப் - பொன்னகரம்,இந்தியா
17-ஜூன்-202118:45:21 IST Report Abuse
திலீப்//....அனைத்து சமுதாயத்தினரும் சாதிவாரி இட ஒதுக்கீடு இல்லாமல் தகுதியின் அடிப்படையில் ....// இதே அடிப்படையை பள்ளி முதல், கல்லூரி, அரசாங்க வேலை, பணிமூப்புவரை அமுல்படுத்தச்சொல்லும் நேர்மைத்திறம் இருக்கிறதா? அப்பொழுதுமட்டும் ஜாதி வேண்டும், இல்லீங்களா? சூப்பருங்க....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X