அப்படியே அந்தப் பெண்கள் அடமானம் வைத்துள்ள நகைகளையும் மீட்க வேண்டும் என்று கேளுங்கள்... | Dinamalar

அப்படியே அந்தப் பெண்கள் அடமானம் வைத்துள்ள நகைகளையும் மீட்க வேண்டும் என்று கேளுங்கள்...

Updated : ஜூன் 17, 2021 | Added : ஜூன் 17, 2021 | கருத்துகள் (15)
Share
ஊரடங்கால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக் குழுவினர், தேசிய மற்றும் தனியார் வங்கிகளில் பெற்றுள்ள கடன் தொகைகளை தமிழக அரசே ஏற்க வேண்டும்.- நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்'அப்படியே அந்த பெண்கள், வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்துள்ளதையும் மீட்டு தர வேண்டும் என்றும் கேளுங்கள். இது குறித்து ஏற்கனவே, தி.மு.க., தேர்தல்
சீமான்,  சந்தோஷ், வீரமணி, எஸ்.ஆர்.சேகர், ரவிகுமார்,

ஊரடங்கால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக் குழுவினர், தேசிய மற்றும் தனியார் வங்கிகளில் பெற்றுள்ள கடன் தொகைகளை தமிழக அரசே ஏற்க வேண்டும்.
- நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்


'அப்படியே அந்த பெண்கள், வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்துள்ளதையும் மீட்டு தர வேண்டும் என்றும் கேளுங்கள். இது குறித்து ஏற்கனவே, தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளது...' என, சொல்லத் தோன்றும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை.



கடந்த ஏப்ரல் 12ல் இருந்து இது வரை, நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாள் சாதனையாக, 38.07 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்னும் அதிக மக்களை தடுப்பூசி மையங்களுக்கு அழைத்து வருவது நம் பணி.
- பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச் செயலர் சந்தோஷ்


'அப்படியே, உலக சாதனையாக, கொரோனாவுக்கு மருந்தை கண்டுபிடிங்க ஜி...' என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச் செயலர் சந்தோஷ் அறிக்கை.



புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு பகுதியில், ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்கு ஏலம் விடும் மத்திய அரசின், ஓ.என்.ஜி.சி., அறிக்கையை எதிர்த்து, டெல்டா காவிரிப் படுகை விவசாயிகள் மீண்டும் தம் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். தமிழக அரசும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. அந்த திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.
- திராவிடர் கழகத் தலைவர் வீரமணி


latest tamil news




'முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி விட்டார். அதனால், அந்த திட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற்று விடும். அதுவரை நாம் சும்மா இருக்கலாமே...' என, கூறத் தோன்றும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கை.



கடவுள் இல்லை; கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை. ஆனால், பூசாரி நியமனம் மட்டும் நான் சொன்னபடி செய் என்பது என்ன நியாயம்?
- பா.ஜ., மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்


'கடவுளை இல்லாமல் ஆக்குவதற்கான முதல் முயற்சியாகத் தான், பூசாரி நியமனத்தை அக்கட்சி கையில் எடுத்துள்ளதோ...' என, கேட்கத் தோன்றும் வகையில், பா.ஜ., மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை.



உயர்கல்வித்துறை ஆசிரியர் பணியிடங்களிலும், ஆசிரியர் அல்லாத பணியிடங்களிலும், ஆதிதிராவிட மக்களுக்கு கிடைக்க வேண்டிய, பின்னடைவு காலி பணியிடங்களின் எண்ணிக்கையைக் கண்டறிந்து, அரசு அதை அறிவிப்பதோடு, அவற்றை நிரப்ப சிறப்புப் பணி நியமன நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி., ரவிகுமார்


'உங்கள் கட்சியின் கோரிக்கையை நிறைவேற்ற, ஒரு, ஐ.ஏ.எஸ்., அதிகாரியை முதல்வர் நியமித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை...' என, சொல்லத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி., ரவிகுமார் அறிக்கை.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X