பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் மேலும் 1 லட்சம் பேர் கோவிட்டிலிருந்து மீண்டனர்

Updated : ஜூன் 17, 2021 | Added : ஜூன் 17, 2021
Share
Advertisement
புதுடில்லி: நாடு முழுவதும் கோவிட் தொற்றில் இருந்து மீள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 67,208 பேர் மட்டுமே கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 2 கோடியே 97 லட்சத்து 313 ஆனது. ஒரே நாளில் 1,03,570 பேர் கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை 2 கோடியே 84 லட்சத்து 91
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கோவிட், கோவிட்வைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்

புதுடில்லி: நாடு முழுவதும் கோவிட் தொற்றில் இருந்து மீள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 67,208 பேர் மட்டுமே கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 2 கோடியே 97 லட்சத்து 313 ஆனது. ஒரே நாளில் 1,03,570 பேர் கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை 2 கோடியே 84 லட்சத்து 91 ஆயிரத்து 670 ஆக அதிகரித்தது. தற்போது 8.26 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 3,81,903 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 95.93 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.29 ஆகவும் உள்ளது.


தடுப்பூசி


இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 34,63,961 பேருக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 26 கோடியே 55 லட்சத்து 19 ஆயிரத்து 251 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.


சோதனைகள்


இந்தியாவில் நேற்று (ஜூன் 16) ஒரே நாளில் 19,31,249 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 38 கோடியே 52 லட்சத்து 38 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X