அயோத்தி நில ஊழல் புகார்: உச்சநீதிமன்றம் கண்காணிப்பில் விசாரணை நடத்த பிரியங்கா வலியுறுத்தல்

Updated : ஜூன் 17, 2021 | Added : ஜூன் 17, 2021 | கருத்துகள் (42)
Share
Advertisement
புதுடில்லி: அயோத்தியில் அதிக விலைக்கு நிலம் வாங்கியது தொடர்பான ஊழல் புகார் குறித்து உச்சநீதிமன்றம் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா வலியுறுத்தியுள்ளார்.ராமர் கோயிலுக்காக அயோத்தி பேக் பைசி கிராமத்தில் 1,208 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு உள்ளது. ரூ.2 கோடி மதிப்புள்ள இந்த நிலத்தை ரூ.18.5 கோடிக்கு அறக்கட்டளை வாங்கியிருப்பதாகவும்,
Priyanka, SC_MonitoredProbe, Ayodhya LandPurchase, Graft Charges, பிரியங்கா, உச்சநீதிமன்றம், கண்காணிப்பு, விசாரணை, அயோத்தி நிலம், ஊழல் புகார்

புதுடில்லி: அயோத்தியில் அதிக விலைக்கு நிலம் வாங்கியது தொடர்பான ஊழல் புகார் குறித்து உச்சநீதிமன்றம் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா வலியுறுத்தியுள்ளார்.

ராமர் கோயிலுக்காக அயோத்தி பேக் பைசி கிராமத்தில் 1,208 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு உள்ளது. ரூ.2 கோடி மதிப்புள்ள இந்த நிலத்தை ரூ.18.5 கோடிக்கு அறக்கட்டளை வாங்கியிருப்பதாகவும், இதில் மிகப்பெரும் ஊழல் நடந்திருப்பதாகவும், இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இந்நிலையில் அயோத்தி நில ஊழல் புகார் குறித்து உச்ச நீதிமன்றம் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பிரியங்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த மார்ச் 18-ம் தேதி அயோத்தியில் ஒரு நிலத்தை 2 பேர் ரூ.2 கோடிக்கு வாங்கினர். அடுத்த 5 நிமிடங்களில் அதே நிலத்தை ராமர் கோயில் அறக்கட்டளை ரூ.18 கோடியே 50 லட்சத்துக்கு வாங்கியது. அதாவது சில நிமிடங்களில் நிலத்தின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதை யாராவது நம்ப முடியுமா? 2 பத்திர பதிவுகளிலும் சாட்சிகளாக கையெழுத்திட்டவர்கள் ஒரே நபர்கள்தான். விலை ஏறி விட்டதாக ராமர் கோயில் அறக்கட்டளை கூறுகிறது.


latest tamil newsஅந்த பகுதியில் நிலத்தின் விலை ரூ.5 கோடிதான் இருக்கும். ஏனெனில், அது ராமர் கோயில் வளாகத்தில் இருந்து தூரத்தில் உள்ளது. கடவுள் நம்பிக்கையின் பெயரில் ஊழல் தேட வாய்ப்பு தேடுவது, கோடிக்கணக்கானோரின் நம்பிக்கை மீது நடத்தப்பட்ட தாக்குதல். உச்ச நீதிமன்றம் உத்தரவின்பேரில்தான் அறக்கட்டளை அமைக்கப்பட்டது. எனவே, இந்த நில ஊழல் குறித்து உச்ச நீதிமன்றம் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan -  ( Posted via: Dinamalar Android App )
18-ஜூன்-202107:31:30 IST Report Abuse
rajan மெகாபீரங்கி ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், நிலக்கரி ஊழல், common Wealth game ஊழல், வாத்ராவின் நில அபகரிப்பு ஊழல், national herald ஊழல், Telecom 2G ஊழல், ஆர்மி வாகனங்கள் வாங்கியதில் ஊழல், விதவைகளுக்கு வீடு வழங்குவதில் பல கோடி ஊழல்............ பட்டியல் நிறைய உள்ளன.
Rate this:
Cancel
Venkatakrishnan - Mumbai,இந்தியா
18-ஜூன்-202100:12:41 IST Report Abuse
Venkatakrishnan காவி சங்கிகள் கோயில் கட்டுவதே கொள்ளை அடிப்பதற்குத்தானே... ராம பக்தி, கிருஷ்ண பக்தி எல்லாம் மேடையும், மைக்கும் உள்ள வரை மட்டுமே
Rate this:
Cancel
S Ramkumar - Tiruvarur,இந்தியா
17-ஜூன்-202121:47:47 IST Report Abuse
S Ramkumar ராமர் அறக்கட்டளை என்பது தனி அறக்கட்டளை. அரசாங்க உதவியில் ஒன்றும் நடக்கவில்லை. வழக்கு விஷயங்கள் தனி. கோயில் கட்டுவது போன்றவற்றை அறக்கட்டளை செய்கிறது. அது தனி சொத்து. அதில் காங்கிரஸ் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை. இப்ப குதிக்கும் அம்மணி காங்கிரஸ் சொத்தான நேஷனல் ஹெரால்ட் பத்திரிக்கை கோடான கோடி சோனியா kudumbam கொள்ளை அடித்த போது வாயை முடி கொண்டு இருந்ததை போல இப்ப இருக்கவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X