பொது செய்தி

இந்தியா

பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீடு எப்படி?; சிபிஎஸ்இ விளக்கம்

Updated : ஜூன் 17, 2021 | Added : ஜூன் 17, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: சிபிஎஸ்இ பிளஸ் 2 ரிசல்ட் வரும் ஜூலை 31ம் தேதி வெளியிடப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மேலும், பிளஸ் 2 மதிப்பெண்கள் கணக்கிடும் முறை குறித்து உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ விளக்கமளித்துள்ளது.கோவிட் 2வது அலை பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி, சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதனைத்தொடர்ந்து பல மாநிலங்களில்
CBSE, Plus2, Marks, HC, Result, சிபிஎஸ்இ, பிளஸ்2, மதிப்பெண், கணக்கீடு, உச்சநீதிமன்றம், விளக்கம், ரிசல்ட், முடிவுகள்

புதுடில்லி: சிபிஎஸ்இ பிளஸ் 2 ரிசல்ட் வரும் ஜூலை 31ம் தேதி வெளியிடப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மேலும், பிளஸ் 2 மதிப்பெண்கள் கணக்கிடும் முறை குறித்து உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ விளக்கமளித்துள்ளது.

கோவிட் 2வது அலை பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி, சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதனைத்தொடர்ந்து பல மாநிலங்களில் நடைபெறும் பிளஸ் 2 தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும், கடந்த ஓராண்டுக்கு மேலாக பள்ளிகள் திறக்காததால் மதிப்பெண்கள் வழங்குவது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண் கணக்கிடும் முறை குறித்து உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ விளக்கமளித்துள்ளது. தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் விளக்கம்:


latest tamil news



* 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 5 பாடங்களில் பெற்ற மதிப்பெண்களில் அதிக மதிப்பெண் பெற்ற 3 பாடங்கள் கணக்கில் கொள்ளப்படும்.
* பிளஸ் 1 வகுப்பு பாடங்களில் 30 சதவீதம் வெயிட்டேஜ் மதிப்பெண்களும் கணக்கில் கொள்ளப்படும்.
* பிளஸ் 2 வகுப்பு பாடங்களில் 40 சதவீதம் வெயிட்டேஜ் மதிப்பெண்களும் கணக்கில் கொள்ளப்படும்.
* பிளஸ் 2-வில் யூனிட் தேர்வுகள், பருவத் தேர்வுகள், செய்முறை தேர்வுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
* செய்முறைத் தேர்வுக்கு 100 மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும்.


ஜூலை 31-ம் தேதி ரிசல்ட்


- இவ்வாறு விளக்கமளித்துள்ள சிபிஎஸ்இ, பிளஸ் 2 ரிசல்ட் வரும் ஜூலை 31-ம் தேதி வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan D - Coimbatore,இந்தியா
17-ஜூன்-202114:02:55 IST Report Abuse
Nagarajan D நமது தமிழக பகுத்தறிவுகளுக்கு புரியுமா இதெல்லாம்?
Rate this:
Cancel
kattus - chennai,இந்தியா
17-ஜூன்-202112:24:53 IST Report Abuse
kattus போங்கப்பு, இங்க திராவிட நாட்டில் ஆல் பாஸ், மார்க் எல்லாம் கெடையாது, அந்த மினிட்ர் அல்லக்கை ஏற்கனவே சொல்லுடிச்சி, நீட் ரத்து, +2 படித்த எல்லோரும் மருத்துவம் பயில thaleevan arasanai வெளியிட்டு உள்ளார்
Rate this:
sri - trichy,இந்தியா
17-ஜூன்-202115:56:14 IST Report Abuse
sriஉங்களுக்கே ஞாயமா . நாங்க படிக்க மாட்டோம் டைரக்ட் ப்ரசிட்டிஸ் பண்ண அனுமதி வேண்டும். பனிரெண்டாம் கிளாஸ் நுழைந்த எல்லோருக்கும் டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும். அத்துடன் எல்லோருக்கும் அரசு வேலை கொடுக்க வேண்டும். அரசு பள்ளி மாணவர்களுக்கு நுறு சதவிகிதம் வேலை கொடுக்கவேண்டும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X