அரசல் புரசல் அரசியல்: ‛தவறு இருந்தா சுட்டிக்காட்டுங்க...!| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அரசல் புரசல் அரசியல்: ‛தவறு இருந்தா சுட்டிக்காட்டுங்க...!'

Updated : ஜூன் 17, 2021 | Added : ஜூன் 17, 2021 | கருத்துகள் (36)
Share
சென்னை: இந்து அறநிலையத் துறையில் இருக்கும் இந்துவை எடுத்து விட்டு, அறநிலையத் துறை என மட்டுமே அரசு அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது.கோவில் சம்பந்தமான விபரங்களை வெளியிடுவதற்காக, உருவாக்கப்பட்டுள்ள இணைய தளத்தில், அறநிலையத்துறையின் கீழ் வரும் மொத்த கோவில்களின் எண்ணிக்கையை குறிப்பிடும் இடத்தில், திருகோவில்கள் என குறிப்பிடாமல், சமய நிறுவனங்கள் என,
அரசல்_புரசல்_அரசியல், சேகர்பாபு,  சங்கரமடம், ஸ்டாலின், திமுக, அரசல், புரசல், அரசியல்,

சென்னை: இந்து அறநிலையத் துறையில் இருக்கும் இந்துவை எடுத்து விட்டு, அறநிலையத் துறை என மட்டுமே அரசு அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது.

கோவில் சம்பந்தமான விபரங்களை வெளியிடுவதற்காக, உருவாக்கப்பட்டுள்ள இணைய தளத்தில், அறநிலையத்துறையின் கீழ் வரும் மொத்த கோவில்களின் எண்ணிக்கையை குறிப்பிடும் இடத்தில், திருகோவில்கள் என குறிப்பிடாமல், சமய நிறுவனங்கள் என, குறிப்பிட்டுள்ளனர்.

இதைப் பார்த்த இந்து தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் ராம ரவிக்குமார், அமைச்சர் சேகர்பாபுவுவின் கவனத்துக்கு கொண்டு போக, ‛அதிகாரிகளிடம் சொல்லி, உடனே நடவடிக்கை எடுக்குறேன்'னு சொல்லி, போனில் பேசியவர், ‛வேற ஏதாவது தவறுகள் இருந்தாலும் சுட்டிக் காட்டுங்க' என, கூறியுள்ளார்.


சங்கரமடம் கோரிக்கை: ஸ்டாலின் ஏற்புசென்னை மயிலாப்பூர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த தி.மு.க., மாவட்ட பிரதிநிதி ஆர்.பாலு, உதயநிதிக்கு படு நெருக்கம்...

தான் வசிக்கும் பகுதிக்கு அருகில் இருக்கும் மயிலாப்பூர் வள்ளீஸ்வரம் தோட்டம் பகுதியில், காஞ்சி சங்கர மடம் சார்பில் கட்டப்பட்டு வரும் சங்கர நேத்ராலயா மருத்துவமனை கட்டடத்துக்கு சென்று, மிரட்டி மாமூல் கேட்டுள்ளார்.


latest tamil newsஇந்த விவகாரத்தை சங்கர மடம், முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு போனதும், நடந்ததை விசாரித்து உறுதி செய்து கொண்ட ஸ்டாலின், பாலுவை கட்சியில் இருந்து நீக்கச் சொல்லிட்டார்

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X