பொது செய்தி

இந்தியா

பயாலாஜிக்கல் - இ தடுப்பூசி 90 சதவீத திறனுடையது

Updated : ஜூன் 17, 2021 | Added : ஜூன் 17, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் தற்போது மருத்துவ பரிசோதனையில் உள்ள பயாலிஜிக்கல் - இ நிறுவனத்தின் தடுப்பூசி, கோவிட்டிற்கு எதிராக 90 சதவீதம் திறனுடையது எனவும், இந்த தொற்றை பரவலை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என, மத்திய அரசின் ஆலோசனை குழு டாக்டர் தெரிவித்து உள்ளார்.கோவிட் கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு அமைத்த பணிக்குழுவின் தலைவரான டாக்டர் என்கே அரோரா
BiologicalE, Vaccine,

புதுடில்லி: இந்தியாவில் தற்போது மருத்துவ பரிசோதனையில் உள்ள பயாலிஜிக்கல் - இ நிறுவனத்தின் தடுப்பூசி, கோவிட்டிற்கு எதிராக 90 சதவீதம் திறனுடையது எனவும், இந்த தொற்றை பரவலை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என, மத்திய அரசின் ஆலோசனை குழு டாக்டர் தெரிவித்து உள்ளார்.

கோவிட் கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு அமைத்த பணிக்குழுவின் தலைவரான டாக்டர் என்கே அரோரா கூறியதாவது: அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் கண்டுபிடித்த நோவாக்ஸ் தடுப்பூசியை, இந்தியாவில் சீரம் நிறுவனம் உற்பத்தி செய்ய உள்ளது. இந்த மருந்து கோவிட்டை கட்டுப்படுத்துவதில் 90 சதவீத திறன் பெற்றது. இந்த தடுப்பூசி விலை குறைவாகவும் இருக்கும். இதே திறன் பெற்ற தடுப்பூசி ஒன்று இந்தியாவில் உருவாகி வருகிறது. பயாலாஜிக்கல் - இ நிறுவனம் தயாரிக்கும் கோர்ப்வாக்ஸ் தடுப்பூசியானது அனைத்து வயதிற்கு ஏற்றதுடன், 90 சதவீத திறன் பெற்றது. இந்த மருந்து தற்போது 3வது கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளது. அக்டோபர் மாதத்தில் பயன்பாட்டிற்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news



உருமாறிய கோவிட்டிற்கு எதிராகவும் இந்த தடுப்பூசி சிறப்பாக செயல்படுவதாக, பயாலாஜிக்கல் இ நிறுவனம் கூறியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MANI DELHI - Delhi,இந்தியா
17-ஜூன்-202120:17:08 IST Report Abuse
MANI DELHI இந்த நாட்டின் தேச விரோத அரசியல் கும்பல்கள் இந்தியா நாட்டின் தயாரிப்பை கேவலப்படுத்தி முடக்கியதன் மூலம் ஒரு வெளிநாட்டு மருந்தை இங்கு வியாபாரம் செய்ய வழி வகுத்திவிட்டார்கள். நாட்டை நேசிக்காதவன் நாசமாய் தான் போவான் என்பது உண்மை...
Rate this:
Cancel
sankar - chennai,இந்தியா
17-ஜூன்-202114:54:44 IST Report Abuse
sankar மேக் இன் இந்தியா தொடரடட்டும் மோடிஜியும் தொடர்வோம்
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
17-ஜூன்-202112:59:38 IST Report Abuse
Ramesh Sargam புதியதாக மற்றுமொரு தடுப்பூசி. அப்படி புது புதுசாக வந்தும், நாட்டின் மக்கள்தொகையில் இன்னும் முப்பது சதவிகிதம் பேருக்கு கூட தடுப்பூசி போடப்படவில்லை.
Rate this:
17-ஜூன்-202115:15:05 IST Report Abuse
G. P. Rajagopalan Rajuஉங்களுக்கு எல்லாம் மூளை கிடையாது.200 கோடி டோஸ் தயார் செய்ய எவ்வளவு நபர்கள், முதலீடு காலம் தேவை என்று யோசிக்க வேண்டும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X