மைக்ரோசாப்ட்டின் இயக்குநர் குழு தலைவரானார் சத்யநாதெல்லா

Updated : ஜூன் 17, 2021 | Added : ஜூன் 17, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
சான்பிரான்சிஸ்கோ: மைக்ரோசாப்ட்டின் இயக்குநர் குழு தலைவராக, அந்த நிறுவனத்தின் சிஇஓ சத்யநாதெல்லா நியமிக்கப்பட்டு உள்ளார்.கடந்த 1975ம் ஆண்டில் துவக்கப்பட்ட மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக , இந்திய வம்சாவளியை சேர்ந்த சத்யநாதெல்லா(53) கடந்த 2014ம் ஆண்டில் நியமிக்கப்பட்டார். அவர் பதவியேற்ற உடன் , கார்ப்பரேட் கட்டமைப்பை எளிமைப்படுத்தும் நோக்கத்தில்,
Microsoft, SatyaNadella, மைக்ரோசாப்ட், சத்யநாதெல்லா,

சான்பிரான்சிஸ்கோ: மைக்ரோசாப்ட்டின் இயக்குநர் குழு தலைவராக, அந்த நிறுவனத்தின் சிஇஓ சத்யநாதெல்லா நியமிக்கப்பட்டு உள்ளார்.

கடந்த 1975ம் ஆண்டில் துவக்கப்பட்ட மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக , இந்திய வம்சாவளியை சேர்ந்த சத்யநாதெல்லா(53) கடந்த 2014ம் ஆண்டில் நியமிக்கப்பட்டார். அவர் பதவியேற்ற உடன் , கார்ப்பரேட் கட்டமைப்பை எளிமைப்படுத்தும் நோக்கத்தில், நிறுவனத்தில் 18 ஆயிரம் பணியிடங்களை நீக்கினார். மேலும் கிளவுட் உள்ளிட்ட பல வழிகளில் கவனத்தை மாற்றி, நிறுவனத்தை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். லிங்க்ட் இன், நுவான்ஸ் கம்யூனிகேஷன்ஸ், உள்ளிட்ட நிறுவனங்களை கையகபடுத்துவதில் சத்யநாதெல்லாவின் பங்கு முக்கியமானது. இவரது உழைப்பு காரணமாக முயற்சியினால், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்கானது ஏழு மடங்கு உயர்ந்து உள்ளது. சந்தை மதிப்பும் 2 லட்சம் அமெரிக்க டாலரை நெருங்குகிறது.


latest tamil news




இந்நிலையில், மைக்ரோசாப்ட்டின் இயக்குநர்கள் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், தொழிலில் உள்ள அச்சுறுத்தல்களை கண்டுபிடித்தும், தனக்கு உள்ள புரிதல் மூலம் சரியான வாய்ப்புகளை பயன்படுத்தி, நிறுவனத்தை மிக உயரத்திற்கு எடுத்து செல்ல ஆலோசனைகளை நாதெல்லா வழங்குவார் . தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டது முதல், நிறுவனத்தின் வளர்ச்சிக்கு சத்ய நாதெல்லா முக்கிய பங்கு வகித்து உள்ளார் எனக்கூறப்பட்டு உள்ளது.


latest tamil news




தற்போது , இயக்குநர்கள் குழு தலைவராக, பில்கேட்ஸ் மற்றும் ஜான் தாம்சன் ஆகியோர் பதவி வகித்து உள்ளனர். அதில், ஜான் தாம்சனுக்கு பதிலாக சத்ய நாதெல்லா நியமிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு முன் தலைமை செயல் அதிகாரியாக இருந்த ஸ்டீவ் பால்மருக்கு, இயக்குநர் குழு தலைவராகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இயக்குநர் குழுவில், தினசரி அலுவல்கள் இயக்குநராக ஜான் தாம்சன் தொடர உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Tirunelveli,யூ.எஸ்.ஏ
18-ஜூன்-202107:35:48 IST Report Abuse
Raj உழைப்பால் உயர்ந்தவர். வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
18-ஜூன்-202106:27:52 IST Report Abuse
 Muruga Vel சந்தை மதிப்பும் 2 லட்சம் அமெரிக்க டாலரை நெருங்குகிறது.குமாரசாமி கணக்கு மாதிரி இருக்கே ..
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-ஜூன்-202119:17:14 IST Report Abuse
Pugazh V வேலை செய்யாதவர்களா? அப்புறம் எப்படி கம்பெனி நல்ல லாபத்தில் ஓடியது? 9990 பேர் வேலை செய்யாமல் தான் கம்பெனி நல்லா ஓடிச்சா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X