பொது செய்தி

இந்தியா

உருமாறிய கொரோனா வைரஸ் வகைகளையும் எதிர்க்கும் 2டிஜி மருந்து

Updated : ஜூன் 17, 2021 | Added : ஜூன் 17, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் கண்டறியப்பட்ட பவுடர் வடிவிலான கொரோனா மருந்தான ‛2-டிஜி', அனைத்து உருமாறிய வகை கொரோனா வைரஸ்களையும் எதிர்க்கும் திறன்மிக்கதாக உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.ஐதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டீஸ் ஆய்வகங்களுடன் இணைந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ உருவாக்கிய கொரோனாவிற்கான மருந்தான 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டிஜி)
2DG, AntiCovidDrug, PreliminaryStudy, CovidVarients, 2டிஜி, கொரோனா, மருந்து, கோவிட், உருமாற்றம், திறன், ஆய்வு

புதுடில்லி: இந்தியாவில் கண்டறியப்பட்ட பவுடர் வடிவிலான கொரோனா மருந்தான ‛2-டிஜி', அனைத்து உருமாறிய வகை கொரோனா வைரஸ்களையும் எதிர்க்கும் திறன்மிக்கதாக உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஐதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டீஸ் ஆய்வகங்களுடன் இணைந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ உருவாக்கிய கொரோனாவிற்கான மருந்தான 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டிஜி) மருந்தின் அவசர கால பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து கடந்த மாதம் இந்த மருந்து பயன்பாட்டுக்கு வந்தது. பவுடர் வடிவிலான இந்த மருந்தை தண்ணீரில் கரைத்து குடிக்கலாம் எனவும், இதனால் கொரோனா நோயாளிகள் மருத்துவ ஆக்சிஜனை சார்ந்திருப்பதை குறைக்க முடிவதாகவும், நோயாளிகள் விரைவில் குணமடைவதாகவும் தெரிவிக்கப்பட்டது.


latest tamil news



இந்நிலையில், உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிராக இந்த 2-டிஜி மருந்து செயல் திறன் மிக்கதா என அன்னத் நாராயண் பட், அபிஷேக் குமார், யோகேஷ் ராய், திவியா வேதகிரி உள்ளிட்டோர் ஆய்வு நடத்தினர். அதில், இந்த 2-டிஜி மருந்து, கொரோனாவின் அனைத்து வகை உருமாறிய வகைகளுக்கு எதிராகவும் செயல்படுகிறது என முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. எனினும் இந்த ஆய்வு இன்னும் மறுஆய்வு செய்யப்படவில்லை என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
17-ஜூன்-202120:28:44 IST Report Abuse
கொக்கி குமாரு திருட்டு திமுக என்னும் வைரஸை அழிக்க ஏதாவது மருந்து கண்டுபிடிங்க டிஆர்டிஓ எஜமான்.
Rate this:
Cancel
17-ஜூன்-202117:34:18 IST Report Abuse
Srinivasan Venkatesan எத்தனை பேருக்கு கொடுத்துள்ளார்கள் எந்த நிலையில் இருந்தவர்கள் அவர்களில் எவ்வளவு பேர் எவ்வளவு சீக்கிரம் குணமானார்கள் என்ற விவரங்களை வெளியிட வேண்டும்
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
17-ஜூன்-202116:03:24 IST Report Abuse
Sivagiri மெடிக்கல் ஷாப்பில் எப்பய்யா கிடைக்கும் ? பேட்டி குடுத்திக்கிட்டே இருந்த்ஸ்ல் eppdi
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X