பொது செய்தி

இந்தியா

கோவிட் 3வது அலையின் தாக்கத்தை அறிய முன்கணிப்பு மாதிரிகள் அவசியம்: ஓபிஎஸ் யோசனை

Updated : ஜூன் 17, 2021 | Added : ஜூன் 17, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை: கோவிட் 3வது அலையின் தாக்கத்தை அறிய முன்கணிப்பு மாதிரிகள் மிகவும் அவசியம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வருக்கு யோசனை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:தமிழகத்தில் கோவிட் நோயின் தாக்கம் குறைந்துகொண்டே வருவதாக, புள்ளிவிவரங்கள் தெரிவித்தாலும், 3வது அலையின் தாக்கம் தவிர்க்க முடியாதது
OPS, OPanneerSelvam, CovidThirdWave, ADMK, அதிமுக, ஓபிஎஸ், பன்னீர்செல்வம், கொரோனா, கோவிட், மூன்றாவது அலை

சென்னை: கோவிட் 3வது அலையின் தாக்கத்தை அறிய முன்கணிப்பு மாதிரிகள் மிகவும் அவசியம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வருக்கு யோசனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் கோவிட் நோயின் தாக்கம் குறைந்துகொண்டே வருவதாக, புள்ளிவிவரங்கள் தெரிவித்தாலும், 3வது அலையின் தாக்கம் தவிர்க்க முடியாதது என்றும், 2வது அலையைவிட 3வது அலையின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்து வருவதால், 'வருமுன் காப்போம்' என்பதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது மிகவும் அவசியம். பல்வேறு நாடுகளில், ஒரு அலையின் தாக்கம் அதன் முந்தைய அலையைவிடத் தீவிரமாக இருந்துள்ளது. இரண்டாவது அலையின் தாக்கம் நமக்குக் கடுமையான விளைவுகளை உண்டாக்கி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியதால், மூன்றாவது அலை குறித்த எச்சரிக்கையை மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ள ஏதுவாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம்.


latest tamil news


கோவிட் 3வது அலையின் தாக்கத்தை அறிய முன்கணிப்பு மாதிரிகள் மிகவும் அவசியம். இதை வைத்துதான் 3வது அலையின் போக்கு எவ்வாறு இருக்கும் என்பதை அறிய முடியும். இந்த முன்கணிப்பு மாதிரிகளுக்கு கோவிட் நோயினால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கையும் அவசியம். இதை வைத்து, எதிர்காலத்திற்குத் தேவையான கட்டமைப்புகளை, மருத்துவ உபகரணங்களைத் தயார் செய்து கொள்வதற்கான முடிவுகளை எடுக்க முடியும்.


latest tamil news


தமிழகத்தில் நேற்று காலை நிலவரப்படி, மொத்தம் 1.12 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் மக்கள்தொகை தற்போது கிட்டத்தட்ட 8 கோடி என்று எடுத்துக்கொண்டாலும்,16 கோடி டோஸ் தடுப்பூசிகள் நமக்குத் தேவை. அதாவது, இதுவரை 7.5 சதவீதம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதால், இன்னும் 92.5 சதவீதம் தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டும். இதுதான் 3வது அலையைக் கட்டுப்படுத்த மிக முக்கியமான வழி. எனவே, தமிழக முதல்வர் இதில் தனி கவனம் செலுத்தி, 3வது அலை ஏற்படாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatesan.v - Chennai,இந்தியா
17-ஜூன்-202122:28:21 IST Report Abuse
Venkatesan.v முதலில் இருக்கும் கட்சியில் இருக்கும் இரண்டாம் இடத்தை தக்க வைத்துக்கொள்ள ஏதாவது யோசிங்க பாஸ் அப்புறமா ஆளுங்கட்சிக்கு ஆசோசனை யோசனை சொல்லலாம் ஓகே வா ?
Rate this:
Cancel
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
17-ஜூன்-202120:26:52 IST Report Abuse
கொக்கி குமாரு இரண்டாவது போட்டோவில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தை பார்த்தால் அப்பாவியா இருக்காரு. எனக்கும் மட்டும் அப்படி தோணுதா?
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-ஜூன்-202119:06:59 IST Report Abuse
Pugazh V ஹலோ இபி சார், ...ஓபிசார் ஒரு அறிக்கை வுட்டுட்டார்.. கமான்... உங்க ஸைடில் இருந்து ஒண்ணும் காணமே....எதாவது வுடுங்க... போரடிக்குதில்ல? என்னது .. அறிக்கை வுட டெல்லி ய கேக்கணுமா? கிளிஞ்சுது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X