பொது செய்தி

இந்தியா

ஸ்டாலினின் டில்லி வருகை : டிரெண்டிங்கில் விமர்சனமும், வரவேற்பும்

Updated : ஜூன் 17, 2021 | Added : ஜூன் 17, 2021 | கருத்துகள் (49)
Share
Advertisement
புதுடில்லி : அரசு முறை பயணமாக டில்லி சென்றுள்ளார் முதல்வர் ஸ்டாலின். இதை வைத்து சமூக ஊடகமான டுவிட்டரில் டிரெண்டிங் செய்கின்றனர் நெட்டிசன்கள். தமிழக முதல்வராக பதவியேற்ற பின் முதன்முறையாக ஸ்டாலின் இன்று (ஜூன் 17) டில்லி புறப்பட்டு சென்றார். சிறப்பு விமானம் மூலமாக டில்லி சென்ற அவருக்கு திமுக., எம்.பி.க்களும், நிர்வாகிகளும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். டில்லியில் உள்ள
DelhiWelcomesStalin, StalinGoBacktoModi, stalin_total_surrender

புதுடில்லி : அரசு முறை பயணமாக டில்லி சென்றுள்ளார் முதல்வர் ஸ்டாலின். இதை வைத்து சமூக ஊடகமான டுவிட்டரில் டிரெண்டிங் செய்கின்றனர் நெட்டிசன்கள்.

தமிழக முதல்வராக பதவியேற்ற பின் முதன்முறையாக ஸ்டாலின் இன்று (ஜூன் 17) டில்லி புறப்பட்டு சென்றார். சிறப்பு விமானம் மூலமாக டில்லி சென்ற அவருக்கு திமுக., எம்.பி.க்களும், நிர்வாகிகளும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் அவர், டில்லியில் கட்டப்பட்டு வரும் தி.மு.க., கட்சி அலுவலகத்தையும் பார்வையிட்டார். மாலை 5 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்து ஸ்டாலின் பேசுகிறார். தமிழகத்திற்கு கூடுதல் கோவிட் தடுப்பூசி தேவை, நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும், செங்கல்பட்டில் கோவிட் தடுப்பூசி உற்பத்திக்கு அனுமதி உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை அவர் வைப்பார் என தெரிகிறது.


latest tamil newsஇதனிடையே முதல்வர் ஸ்டாலின் டில்லி சென்றுள்ள விஷயம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. அவரின் டில்லியை வருகையை வரவேற்றும், விமர்சித்தும் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதன்காரணமாக டுவிட்டரில் #DelhiWelcomesStalin, #StalinGoBacktoModi, #stalin_total_surrender ஆகிய ஹேஷ்டாக்குகள் டிரெண்ட் ஆகின.

‛‛முதல்வராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக ஸ்டாலின் டில்லி வந்துள்ளார். பலமான மனிதர், பலமான இடத்திற்கு வந்துள்ளார்''. ‛‛தெற்கிலிருந்து வரும் சூரியன் இன்று வடக்கு வானத்தை பிரகாசமாக்க போகிறது. உங்களின் டில்லி பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்''. ‛‛முதுகெலும்புள்ள ஒரு முதல்வர் டில்லி கோட்டைக்கு வந்துள்ளார்'' இப்படி பலரும் அவரை வாழ்த்தி கருத்து பதிவிட்டனர்.


latest tamil newsஅதேசமயம் அவரின் வருகையை விமர்சித்தும் சிலர் கருத்துக்களை பதிவிட்டனர். குறிப்பாக அதிகளவில் மீம்ஸ் தொடர்பான விஷயங்கள் பகிரப்பட்டு வருகின்றன. மோடி தமிழகம் வரும்போதெல்லாம் கோ பேக் மோடி என திமுக., உள்ளிட்ட சில கட்சிகள் டுவிட்டரில் எதிர்ப்பு தெரிவிக்கும். அதேப்போன்று இவரின் டில்லி பயணத்தை குறிப்பிட்டும் சிலர் விமர்சித்தனர். அதேசமயம் ஸ்டாலினை வரவேற்றும் பா.ஜ.,வினர் சிலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக பிரதமரை சந்திக்க வரும் ஸ்டாலினுக்கு சிறப்பு வாகனத்தை மோடி அனுப்பி இருப்பதாகவும், இது தான் பா.ஜ.,வின் கலாச்சாரம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-ஜூன்-202108:37:30 IST Report Abuse
பேசும் தமிழன் கோ பேக் ஸ்டாலின் ஹேஷடேக் .... இல்லையா???
Rate this:
Cancel
ravi - chennai,இந்தியா
18-ஜூன்-202107:26:33 IST Report Abuse
ravi திமுகவின் போக்கு சரியில்லை-ஓட்டுக்காக மதச்சார்பின்ன்மை என்று அடிக்கடி பேசினார்கள். இப்போது மத்திய அரசு ஒன்றிய அரசாம். இது இப்படியே போனால் திமுக மதிப்பு குன்றிய அரசாக மாறும் என்பதில் ஐயமில்லை. திமுக மாண்பு குறைந்து காணாமல் போகும் போலும். வேளாண் துறையை கல்வித்துறையை கெடுத்து பணம் சம்பாதிக்கும் வழியை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். திமுக மத்திய அரசின் எல்லா திட்டங்களையும் தடுத்துக்கொண்டே இருந்தால் மத்திய அரசு அந்தந்த துறைகளில் கொடுத்துவரும் மானியத்தை கொடுக்கக்கூடாது. இது எப்படி இருக்கு என்றால். சிலர் அப்பாவிடம் உன் சம்பளத்தை எனக்கு கொடு நான் குடும்பத்தை பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி நேராக டாஸ்மாக் செல்வார்கள். அதுபோல்தான் இருக்கு திமுகவின் இன்றய நிலை. திமுகவிற்கு நிதானம் போதாது. மத்தியரசின் திட்டங்கள் அருமையானவை. பாராட்டத்தக்கவை. என்ன செய்வது படித்தவர்கள் எல்லாம் வேடிக்கைதான் பார்க்கமுடியும்.
Rate this:
Cancel
ravi - chennai,இந்தியா
18-ஜூன்-202107:23:15 IST Report Abuse
ravi திமுகவின் போக்கு சரியில்லை-ஓட்டுக்காக மதச்சார்பின்ன்மை என்று அடிக்கடி பேசினார்கள். இப்போது மத்திய அரசு ஒன்றிய அரசாம். இது இப்படியே போனால் திமுக மதிப்பு குன்றிய அரசாக மாறும் என்பதில் ஐயமில்லை. திமுக மாண்பு குறைந்து காணாமல் போகும் போலும். வேளாண் துறையை கல்வித்துறையை கெடுத்து பணம் சம்பாதிக்கும் வழியை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். திமுகவின் கான்ஸ்டான்டின் பரந்தாமன் கண்ணதாசன் போன்றோர் திமிரோடு பேச ஆரம்பித்துவிட்டார்கள். என்னவோ உலகத்தில் உள்ள எல்லா மேதாவிகளும் திமுகவில் தான் இருப்பதுபோலவும் ஒரு ருபாய் கூட ஊழல் செய்யாத உத்தமசீலர்கள் எல்லாம் திமுகவில் இருப்பதுபோலவும் நாடகம் ஆடுகிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X