பொது செய்தி

தமிழ்நாடு

கணிசமாக சிக்கும் 'அரைஞ்சான் மீன்': விலை சரிவால் அள்ளிச்செல்லும் மக்கள்

Added : ஜூன் 17, 2021
Share
Advertisement
மேட்டூர்: காவிரியில் கணிசமாக சிக்குவதால் அரைஞ்சான் மீன்கள் விலை சரிந்துள்ளது. இதனால், மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.மேட்டூர் அணையில், கடந்த, 12ல் டெல்டா பாசனத்துக்கு காவிரியாற்றில் வினாடிக்கு, 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. இந்த நீர் அணை அடிவாரம் காவிரியாற்றில் பெருக்கெடுத்து செல்கிறது. இந்த நீரோட்டத்துக்கு எதிராக, அரைஞ்சான் எனும் சிறு மீன்கள், கூட்டம்,

மேட்டூர்: காவிரியில் கணிசமாக சிக்குவதால் அரைஞ்சான் மீன்கள் விலை சரிந்துள்ளது. இதனால், மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.


மேட்டூர் அணையில், கடந்த, 12ல் டெல்டா பாசனத்துக்கு காவிரியாற்றில் வினாடிக்கு, 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. இந்த நீர் அணை அடிவாரம் காவிரியாற்றில் பெருக்கெடுத்து செல்கிறது. இந்த நீரோட்டத்துக்கு எதிராக, அரைஞ்சான் எனும் சிறு மீன்கள், கூட்டம், கூட்டமாக நீந்தும். தற்போது அணையில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்வதால் அரைஞ்சான் மீன்கள் காவிரியில் கணிசமாக சிக்குகின்றன. சில நாளாக, மேட்டூர் காவிரியாற்றில் காலை நேரம் மீனவர்கள் பரிசலில் கூட்டமாக மீன் பிடிக்கின்றனர். அவர்கள் வலையில், அரைஞ்சான் மீன்கள் ஏராளமாக சிக்குகின்றன. இதனால், கடந்த மாதம் கிலோ, 150க்கு விற்ற அரைஞ்சான், தற்போது, 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால், மக்கள் காலையிலேயே மேட்டூர் காவிரியாற்றுக்கு மீன் வாங்க வருகின்றனர். மீனவர்கள், அரைஞ்சான் மீன்களை அங்கேயே உயிருடன் எடை போட்டு விற்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X