பொது செய்தி

தமிழ்நாடு

பழங்குடியினருக்கு தடுப்பூசி செலுத்த 5 கி.மீ., நடந்தே சென்ற அதிகாரிகள்

Added : ஜூன் 17, 2021
Share
Advertisement
குன்னுார்: நீலகிரி மாவட்டம், குன்னுார் யானை பள்ளம் கிராமத்தில், வருவாய் மற்றும் சுகாதார துறையினர் 5 கி.மீ., வரை நடந்து சென்று பழங்குடியின மக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர்.நீலகிரி மாவட்டம் குன்னுாரில் இருந்து 22 கி.மீ., தொலைவில் உள்ள யானை பள்ளம் பகுதியில் உள்ள பழங்குடியின கிராமங்களில், 18 வயதுக்கு மேற்பட்ட 120 பேருக்கு நேற்று தடுப்பூசி போடும் முகாம், வருவாய் துறை உதவியுடன்
 பழங்குடியினருக்கு தடுப்பூசி செலுத்த 5 கி.மீ., நடந்தே சென்ற அதிகாரிகள்

குன்னுார்: நீலகிரி மாவட்டம், குன்னுார் யானை பள்ளம் கிராமத்தில், வருவாய் மற்றும் சுகாதார துறையினர் 5 கி.மீ., வரை நடந்து சென்று பழங்குடியின மக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர்.

நீலகிரி மாவட்டம் குன்னுாரில் இருந்து 22 கி.மீ., தொலைவில் உள்ள யானை பள்ளம் பகுதியில் உள்ள பழங்குடியின கிராமங்களில், 18 வயதுக்கு மேற்பட்ட 120 பேருக்கு நேற்று தடுப்பூசி போடும் முகாம், வருவாய் துறை உதவியுடன் சுகாதார துறை சார்பில், குன்னூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஹாஜிரா பேகம் தலைமையில் நடந்தது.

பெரும்பாலான பழங்குடியின மக்கள் தடுப்பூசி போட தயக்கம் காட்டியதால், தாசில்தார் சீனிவாசன், தனி தாசில்தார் முனிஷ் உட்பட வருவாய்துறையினர், சுகாதார துறையினர் சுமார் 5 கி.மீ., வரை சுற்றளவில் நடந்தே சென்று வீடுகளில் இருந்த இரு மனநலன் குன்றியவர்கள் உட்பட பழங்குடியினருக்கு தடுப்பூசி செலுத்தினர்.

தடுப்பூசி செலுத்த வராதவர்களுக்கு ஓரிரு நாளில் போடப்பட்டு 100 சதவீதம் நிறைவு செய்யப்பட உள்ளது.குன்னூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஹாஜிரா பேகம் கூறுகையில், " குன்னூர் புதுக்காடு, சின்ன குரும்பாடி, குரும்பாடி, சேம்புக்கரை, கொல்லிமலை, பச்சைக்காடு உள்ளிட்ட பழங்குடியின கிராமங்களில், 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது யானை பள்ளம், சின்னாள கோம்பை, சடையன் கோம்பை உள்ளிட்ட பழங்குடியினருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. மொத்தம் 1500 பேரில் 1200 வரை போடப்பட்டுள்ளது," என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X