சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

'லாஜிக்' வேண்டாமா?

Added : ஜூன் 17, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
'லாஜிக்' வேண்டாமா?'எதிர்க்கட்சியினரையாவது சமாளித்து விடலாம்; சொந்த கட்சியில் இருக்கும் அதிருப்தியாளர்களை சமாளிப்பது தான், பெரிய பிரச்னையாக உள்ளது' என, சோக ராகம் பாடுகிறார், கேரள மாநில காங்., தலைவர் கே.சுதாகரன். கேரளாவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், ஆளும் மார்க்சிஸ்ட் மீண்டும் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்தது. இதற்கு முந்தைய தேர்தல் வரை, ஆளும்

 அக்கம் பக்கம்


'லாஜிக்' வேண்டாமா?



'எதிர்க்கட்சியினரையாவது சமாளித்து விடலாம்; சொந்த கட்சியில் இருக்கும் அதிருப்தியாளர்களை சமாளிப்பது தான், பெரிய பிரச்னையாக உள்ளது' என, சோக ராகம் பாடுகிறார், கேரள மாநில காங்., தலைவர் கே.சுதாகரன். கேரளாவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், ஆளும் மார்க்சிஸ்ட் மீண்டும் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்தது. இதற்கு முந்தைய தேர்தல் வரை, ஆளும் கட்சி தோற்று, எதிர்க்கட்சி ஆட்சி அமைப்பது தான் வழக்கமாக இருந்தது. இந்த முறை அதை தகர்த்து, மார்க்சிஸ்ட் கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினார், முதல்வர் பினராயி விஜயன். கோஷ்டி பூசல் தான் காங்கிரஸ் தோல்விக்கு காரணமாக கூறப்பட்டது. இதனால், காங்., மாநில தலைவராக இருந்த முல்லப்பள்ளி ராமச்சந்திரன் அதிரடியாக நீக்கப்பட்டு, புதிய தலைவராக நியமிக்கப்பட்டார் கே.சுதாகரன். இவர் பதவியேற்பதற்கு முன்பே, அவரை பற்றி ஆயிரக்கணக்கான புகார் மனுக்கள், கட்சியில் உள்ள அவரது அதிருப்தியாளர்களால், டில்லி மேலிடத்துக்கு பறந்துள்ளன. 'முதல்வர் பினராயி விஜயன் கண்ணுாரைச் சேர்ந்தவர்; சுதாகரனும் அதே ஊர் தான். இதனால், ஆளும் கட்சியை எதிர்த்து, சுதாகரன் அரசியல் செய்ய மாட்டார். முதல்வருடன் மறைமுகமாக நட்பு வைத்து, கட்சியை அழித்து விடுவார்' என்றும் அந்த மொட்டை 'பெட்டிஷன்'களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைக் கேள்விப்பட்ட சுதாகரன், 'புகார் சொல்வதற்கு ஒரு, 'லாஜிக்' வேண்டாமா... இப்படி இருந்தால் கட்சி எப்படி உருப்படும்' எனக் கதறுகிறார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
19-ஜூன்-202103:53:09 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே இப்படிபட்ட கட்சியினர் நாட்டையும் காட்டி கொடுக்க தயங்க மாட்டார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X