இதே நாளில் அன்று| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஜூன் 17, 2021
Share
ஜூன் 18, 1920சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சிறுவயல் கிராமத்தில், 1920 ஜூன் 18ம் தேதி பிறந்தவர் சின்ன அண்ணாமலை. இயற்பெயர் நாகப்பன். 13 வயதிலேயே, சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார். மலேஷியாவில் உள்ள பினாங்கிற்கு சென்றவர், அங்கு கள்ளுக்கடைக்கு எதிராக போராடினார். இதனால் கைது செய்யப்பட்டு, இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டார்.கடந்த 1942-ல், போலீஸ் தடையை


இதே நாளில் அன்று


ஜூன் 18, 1920



சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சிறுவயல் கிராமத்தில், 1920 ஜூன் 18ம் தேதி பிறந்தவர் சின்ன அண்ணாமலை. இயற்பெயர் நாகப்பன். 13 வயதிலேயே, சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார். மலேஷியாவில் உள்ள பினாங்கிற்கு சென்றவர், அங்கு கள்ளுக்கடைக்கு எதிராக போராடினார். இதனால் கைது செய்யப்பட்டு, இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டார்.கடந்த 1942-ல், போலீஸ் தடையை மீறியதற்காக கைது செய்யப்பட்டு, திருவாடானை சிறையில் அடைக்கப்பட்டார். மறுநாள் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து, சிறைக் கதவை உடைத்து, இவரை விடுவித்தனர். இதனால், ஐந்து ஆண்டு கடுங்காவல் சிறைவாசம்
அனுபவித்தார்.சுதந்திரத்திற்கு பின், சென்னையில் 'தமிழ்ப் பண்ணை' புத்தக நிலையத்தை துவக்கினார். பல நுால்கள் எழுதியுள்ளார். காந்தியிடம் அனுமதி பெற்று அவரது 'ஹரிஜன்' இதழை, தமிழில் தன் பதிப்பகம் மூலம் வெளியிட்டார்.காங்கிரசை வலுப்படுத்துவதற்காக, சிவாஜி கணேசன் ரசிகர் மன்றத்தை துவக்கினார். 1980 ஜூன் 18ம் தேதி, தன் 60வது பிறந்த நாள் விழாவின் போது காலமானார்.சின்ன அண்ணாமலை பிறந்த மற்றும் மறைந்த தினம் இன்று!

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X