கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தேச துரோக வழக்கில் நடிகை ஆயிஷா சுல்தானாவுக்கு முன் ஜாமின்

Updated : ஜூன் 17, 2021 | Added : ஜூன் 17, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
திருவனந்தபுரம்: சர்ச்சை கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட தேச துரோக வழக்கில், நடிகையும் சமூக செயற்பாட்டாளருமான ஆயிஷா சுல்தானாவுக்கு கேரள உயர்நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியது. யூனியன் பிரதேசமான லட்சத்தீவை சேர்ந்த திரைப்பட நடிகை ஆயிஷா சுல்தானா, லட்சத்தீவில், தற்போது தினசரி, 100 பேரிடம் தொற்று கண்டறியப்படுகிறது.'இதை அத்தீவுகளில் வசிக்கும் மக்களுக்கு எதிராக, மத்திய
தேச துரோக வழக்கு,ஆயிஷா சுல்தானா, முன் ஜாமின்

திருவனந்தபுரம்: சர்ச்சை கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட தேச துரோக வழக்கில், நடிகையும் சமூக செயற்பாட்டாளருமான ஆயிஷா சுல்தானாவுக்கு கேரள உயர்நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியது.

யூனியன் பிரதேசமான லட்சத்தீவை சேர்ந்த திரைப்பட நடிகை ஆயிஷா சுல்தானா, லட்சத்தீவில், தற்போது தினசரி, 100 பேரிடம் தொற்று கண்டறியப்படுகிறது.'இதை அத்தீவுகளில் வசிக்கும் மக்களுக்கு எதிராக, மத்திய அரசு கையில் எடுத்துள்ள உயிர் ஆயுதமாக கருதுகிறேன்' என கருத்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.


latest tamil news
இது தொடர்பாக லட்சத்தீவுகளின் பா.ஜ., தலைவர் அப்துல் காதர் ஹாஜி கவரத்தி போலீசில் கொடுத்த புகார் அடிப்படையில், ஆயிஷா சுல்தானா மீது தேச துரோகம், அரசின் மீது வெறுப்பு ஏற்படும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி ஆயிஷா சுல்தானா தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், எப்போதெல்லாம் போலீஸ் விசாரணைக்கு அழைத்தாலும் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என நிபந்தனையுடன் ஒரு வாரத்திற்கு முன் ஜாமின் வழங்கியது.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-ஜூன்-202120:20:53 IST Report Abuse
இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு தேசத்துரோகம் குற்றமில்லை .. கருத்து சுதந்திரம் அது..
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
18-ஜூன்-202110:54:15 IST Report Abuse
sridhar Jaameen is more easily available than meen .
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
18-ஜூன்-202109:06:51 IST Report Abuse
Kumar ஐயா துரைமார்களே தேசதுரோகம் எல்லாம் ஒரு குற்றமா?. தலைவர்கள் செய்த தவறுகள்,ஊழல்கள் இவற்றைப் பற்றி பேசுவதுதான் மிகப்பெரிய குற்றம். அவர்களைத்தான் உடனே பிடித்து உள்ளே போடவேண்டும். படி அளக்கிறவர்கள் சொல்வதுதானே சட்டம். வாழ்க வளும்டன்.வாழ்க வையகம்.
Rate this:
CHARUMATHI - KERALA,இந்தியா
18-ஜூன்-202110:57:43 IST Report Abuse
CHARUMATHIvery correct kishore k samy ku no bail but this girl got it...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X