பொது செய்தி

இந்தியா

போபாலில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு!

Updated : ஜூன் 17, 2021 | Added : ஜூன் 17, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
போபால்: தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் அறிக்கைப் படி மத்திய பிரதேச தலைநகர் போபாலில் 'கோவிட்-19' நோயை உண்டாக்கும் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில மருத்துவக் கல்வி அமைச்சர் விஸ்வாஸ் சாரங் தெரிவித்தார். இந்தியாவில் கடந்த பல நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. ஜூன் 17 நிலவரப்படி 67,208 புதிய கோவிட் பாதிப்புகள்

போபால்: தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் அறிக்கைப் படி மத்திய பிரதேச தலைநகர் போபாலில் 'கோவிட்-19' நோயை உண்டாக்கும் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில மருத்துவக் கல்வி அமைச்சர் விஸ்வாஸ் சாரங் தெரிவித்தார்.



latest tamil news



இந்தியாவில் கடந்த பல நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. ஜூன் 17 நிலவரப்படி 67,208 புதிய கோவிட் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. தொடர்ந்து 10-வது நாளாக கோவிட் பாதிப்பு ஒரு லட்சத்துக்கு கீழ் பதிவாகிறது. இதற்கிடையே கொரோனா வைரஸ் புதிய வகைகளாக கிளைத்துக் கொண்டிருக்கிறது. எளிதில் பரவக்கூடிய டெல்டா வகை வைரஸானது உருமாறி 'டெல்டா பிளஸ்' அல்லது 'ஏ.ஒய் 1' வகையை உருவாக்குவதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இருப்பினும் அவை இன்னும் கவலை தரும் வகையாகவில்லை என்கின்றனர். மஹாராஷ்டிர அரசு 'டெல்டா பிளஸ்' மூன்றாவது அலை நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தக்கூடும் என எச்சரித்துள்ளது.


latest tamil news



இந்நிலையில் போபாலில் புதிய வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடைபெறுவதாகவும், அந்த வகை வைரஸின் பரவலை தடுக்க, பாதிக்கப்பட்டவருடன் தொடர்பிலிருந்த நபர்களை கண்டறியும் பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளது என அம்மாநில மருத்துவக் கல்வி அமைச்சர் தெரிவித்தார். புதிய வகை பற்றிய கூடுதல் விவரங்கள் உடனடியாக கிடைக்கவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-ஜூன்-202105:09:13 IST Report Abuse
ஆப்பு போபால் வைரஸ்னு சொல்லி அந்நகர மக்களை புண்படுத்தாதீங்க. ஏதாவது க்ரீக் எழுத்துல ஸிக்மா, லேம்டா, எப்சிலான்னு பேரை வெச்சுடுங்க. அவிங்கதான் இப்போ இளிச்ச வாயன்க.
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
18-ஜூன்-202105:01:18 IST Report Abuse
மதுரை விருமாண்டி வெரட்டி வெரட்டி ஆட்சியைக் கவுத்தது புதுப்புது கொரோனாவை கண்டுபிடிக்கத் தானா?
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
18-ஜூன்-202100:16:16 IST Report Abuse
மதுரை விருமாண்டி இப்பெருந்தொற்று காலத்தில் மட்டும், மருத்துவத் துறையில் சுமார் 24 கோடீசுவரர்களின் சொத்து மதிப்பு பல்லாயிரம் கோடி அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. ஆனால், அதே சமயம், ஒரு நாள் வருமானம் ரூபாய் 140-க்கும் குறைவாக பெறுபவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 6 கோடியில் இருந்து 13.4 கோடி பேராக உயர்ந்துள்ளது. WHERE DISEASE, THERE MONEY TO BE MADE ன்னு தடுப்பூசியை ஏற்றுமதி பண்ணி, உள்நாட்டில் இருக்கிறவர்களுக்கு பாதி ஊசியை போட்டு, அதனால வைரஸை வீரியமாக்கி மருத்துவ பிரச்சினையை பெரிதாக வளர்த்து, முதலாளிகளுக்காக வாழும் தெய்வம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X